மீனம் ராசிக்கு மாஸ் அதிர்ஷ்டம்.. பணவரவு, வீடு, நிலம், சொத்து யோகம் கைகூடும்!

  • Rasi palan this week: செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 5 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 5 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    மீனம் ராசி பலன்

    மீனம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு துணை விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். குடும்ப விஷயத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. தேவையில்லாத தகராறுகளைத் தவிர்க்க வேண்டும். உறவுகளுக்குள் கோபம், வாக்குவாதம் போன்றவற்றை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும்.

    முன்னேற்றம்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் நடக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். தொலைதூரப் பயணங்கள் ஏற்படும். கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

    Advertisement

    பேச்சில் கவனம்

    உறவுகளுக்குள் சிக்கல்களைத் தவிர்ப்பது நல்லது. எந்தவிதமான இடமாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்ளக்கூடிய நல்ல காலகட்டம். பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. இந்த மாதம் முழுவதும் தலைவலி, டென்ஷன், தூக்கமின்மை இருந்து கொண்டே இருக்கும்.

    வீடு, சொத்துகள் யோகம்

    பஞ்சம ஸ்தானத்தில் நீச்சம் பெற்ற செவ்வாயுடன் குரு இணைவதால் நிலம், வீடு, சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். நிறைய இடமாற்றங்கள் ஏற்படும். மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்வீர்கள். தேவையில்லாத மருத்துவ செலவுகள் வரும் வாய்ப்புள்ளது. எந்த முடிவுகளை எடுத்தாலும் சாதகமாக இருக்கும். அல்சர் போன்ற வயிறு தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரன் பலமாக இருப்பதால் நல்ல ஏற்றங்கள் ஏற்படும்.

    Advertisement

    பணவரவு

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு இருந்தாலும் வேலை அதை விட அதிகமாக இருக்கும். நிம்மதி இல்லாத தன்மை இருந்து கொண்டே இருக்கும். சனி வக்கிரமாக இருக்கிறார். புதன் நட்சத்திரத்தில் சனி செல்கிறார் என்பதால் கவனம் தேவை. அனந்தபத்மநாபன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Meenam (Pisces) sign during the period from September 22 to September 27.