Rasi palan this week: அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. மீன ராசிக்கு தொழிலில் அதிர்ஷ்டம்

  • Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மீனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மீனம் ராசி பலன்

    மீனம் ராசியினருக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். நிறைய பேருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். ரத்த சர்க்கரையை பார்த்துக் கொள்வது நல்லது. நிறைய பண வரவு, கமிஷன், காப்பீடு பண் போன்றவை வரும். 7 ஆம் இடத்தில் பலமான கிரகங்கள் அமர்ந்திருப்பதால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெரும் மாற்றங்கள் வந்து சேரும்.

    Advertisement

    குரு அருள்

    பஞ்சம ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதால் எல்லா விஷயங்களையும் எளிமையாக முடிப்பீர்கள். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். எல்லா விஷயங்களையும் தடையின்றி முடிக்க அருகில் இருக்கும் வாராஹி அம்மன், காமாட்சி, துர்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வருவது நன்மையைத் தரும். டென்ஷன், பிரஷர் குறையும். எல்லா விஷயங்களையும் எளிமையாக முடிக்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.

    லாபம் கொட்டும்

    விட்டுப்போன வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டு. ஹோட்டல், பள்ளி போன்றவற்றை ஆரம்பித்து, அதில் நல்ல லாபம் சம்பாதிப்பீர்கள். கவலைப்படும் அளவுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாது. நல்ல ஏற்றங்களும், அருமையான வாய்ப்புகளும் வந்து சேரும். எல்லா விஷயங்களிலும் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். குடும்பத்தில் அந்நியோன்ய குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    முன்னேற்றம்

    தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். கணவர், மனைவி இருவரின் உடல்நிலையிலும் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேறு தொழில் செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும். கணக்கு வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் திடீரென மாபெரும் வெற்றியையும், அனுகூலத்தையும் பெறக்கூடிய காலகட்டம்.

    தொழில்

    தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். தொழிலில் பெரிய வெற்றிகள் ஏற்படும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். வாகனம் தொடர்பான விஷயங்களில் அதீத நன்மை ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களிலும் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். ஜென்மசனியிலும் குரு பார்வை இருப்பதால் பெரிய அனுகூலங்கள் ஏற்படும்.

    Advertisement

    தடை நீங்கும்

    சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி ஏற்படும். அடிவயிறு, கழிவுப்பாதை, முதுகுத் தண்டுவடம் தொடர்பான பாதிப்புகளில் அடுத்த ஆண்டு வரை கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். அனந்த பத்மநாபன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Meenam Rasi Weekly Horoscope: Meenam (Pisces) natives may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.