Rasi Palan This Week: மீனம் ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டாகும்

  • Rasi Palan This Week: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மீனம்

    மீனம் ராசி, விருச்சிகம் லக்னத்திற்கு ஏற்றமும், நம்பிக்கையும், சந்தோஷமும் உண்டாகும் காலகட்டம். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரத்தில் ஆடி மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    சுபகாரியம்

    உறவுகளுக்குள் பெரிய கஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நிறைய சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். எல்லா விதமான நன்மைகளும், ஆனந்தமும் உண்டாகும். உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். உறவுகளில் அனுகூலம் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும்.

    சொத்து சேரும்

    அசையும் அசையா பொருள்களை வாங்கும் யோகம் உண்டு. குலதெய்வ கோயிலுக்குச் சென்று வரும் அமைப்பு உள்ளது. குலதெய்வத்துக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்வது நன்மைகளை ஏற்படுத்தித் தரும். யோகமும், சந்தோஷமும், ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். அம்பாளை மனதார வழிபாடு செய்வது, அம்மாள் மந்திரங்களை கேட்பது மேன்மையைத் தரும்.

    Advertisement

    யோகம்

    ஆண் குழந்தை பிறப்பதற்கான யோகம் உண்டாகும். முதல் குழந்தைக்கு அங்கீகாரம், விருது கிடைக்கும் வாய்ப்புள்ளது. நல்ல மதிப்பெண் எடுப்பது, சீட்டு கிடைப்பது போன்ற யோகம் உண்டு. எந்த காரியத்தை தொட்டாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கழுத்து, தொண்டை, வண்டி, வாகனங்களில் செல்லும்போது, இளைய சகோதரரின் ஆரோக்கியம், பயணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    கவனம்

    போனில் சண்டை வருவது, போனில் திருட்டுப் போவது, உணவுப் பொருள்களால் பாதிப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. சோர்ந்து போவதற்கான வாய்ப்பு ஏற்படும். சாப்பாட்டை தவிர்க்கும் அமைப்பு, தாமதமாக சாப்பிடுவது போன்றவை ஏற்படும் என்பதால் பார்த்துக் கொள்ள வேண்டும். யாரையும் நம்பி பணம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    வழிபாடு

    தெய்வத்தின் அனுக்கிரகத்தால் பாதிப்பு குறையும். சுப்பிரமணியர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். முருகர் கோயிலில் அபிஷேகத்துக்கு தருவது நன்மையைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதாரமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: Let us look at the favorable outcomes in store for those born under the Meenam sign during this week, from July 13 to 19.