ஜாவா சுந்தரேஷனாக மாறும் மேஷ ராசி.. வீடு, வாகனம், பண வரவு.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது

  • Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

    அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு அருமையான காலகட்டம். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். மற்றவர்கள் மூலமாக நிறைய லாபங்கள் கிடைக்கும். சனி வக்கிரமாக இருப்பதால் முடி கொட்டுவது, கால் வலி போன்றவை இருந்து கொண்டே இருக்கும். ஒரு வாரத்திற்குப் பிறகு நிலைமை சீராகும். நிறைய சந்தோஷங்கள் பார்க்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    பணவரவு

    குரு வக்கிரமடையும்போது உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். வெளியிடம், தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். நிறைய அலைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பண வரவு அற்புதமாக இருக்கும். பெரிய கெளரவங்கள் ஏற்படக்கூடிய காலகட்டம். வெளியூர், வெளிநாடு என இனிமையான பயணங்களை மேற்கொள்வீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.

    Advertisement

    நிலம், வீடு வாங்கும் யோகம்

    நிலம், வீடு வாங்குவதற்கான யோகம் ஏற்படும். வண்டி, வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கணினி, செல்போன் வாங்கும் யோகம், வீட்டில் இன்டீரியர் டெக்கரேஷன் போன்றவற்றை செய்யும் அமைப்பு உள்ளது. தொலைதூரத்தில் இருந்து நிறைய நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஆரோக்கியம்

    மற்றவர்கள் தேவையில்லாமல் பேசினால் கூட அதை தலையில் போட்டுக் கொண்டு யோசிக்காமல் இருப்பது நன்மை பயக்கும். மற்றவர்களை நம்பி வாழத் தேவையில்லை என்று புரிந்து கொள்வது நல்லது. சைனஸ், கண், தலைவலி, காது, மூக்கு, தொண்டை, கழுத்து தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    வழிபாடு

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெள்ளிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். கணவர் மனைவி விஷயத்தில், மனைவி கணவர் விஷயத்திலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம் 80 சதவீதம், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்மைகள் உண்டாகும். லட்சுமி நாராயணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Mesham (Aries) sign during the period from october 12 to 18 (Purattasi 25 to Aippasi 1).