Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மேஷம் ராசியினருக்கு குடும்ப விஷயத்தில் இணக்கமாகச் செல்வது நல்லது. நிறைய சுப காரியங்கள் நடக்கும். வீடு, நிலம், வண்டி வாகனம், பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். பொறுமையாக கையாளுவது நன்மையை ஏற்படுத்திக் கொடுக்கும். இழுபறியாக இருந்த விஷயங்கள் படிப்படியாக மாறும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வரும் நல்ல செய்தி முன்னேற்றத்தை ஏற்படுத்தும். லாபத்தின் அளவு பலமடங்கு உயரும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். ஏராளமான பணிகள், பொறுப்புகள் இருக்கும். பண விஷயம், கொடுக்கல் வாங்கல் என ஏராளமான பணிகள் இருக்கும். அதில் எல்லாம் நீங்களாகவே சிக்கிக் கொள்வீர்கள். எல்லோருடைய பிரச்சனையையும் உங்களுடைய பிரச்சனையாக கருதிக் கொள்ளாமல் விலகி நிற்பது நன்மையைத் தரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பலவிதமான சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இந்த வாரம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். 30 ஆம் தேதி முதல் உங்கள் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். திருமணம் நடப்பதற்கான யோகம் ஏற்படும். நிறைய பேர் கடனை அடைத்து முடிப்பீர்கள். எல்லா இடங்களிலும் சந்தோஷம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இடம், வீடு, மனை, சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். இலக்கு வைக்கும் விஷயங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது சகலவித முன்னேற்றங்களையும் தரும். சந்தோஷம் 85 சதவீதமும், பொருளாதாரத்தில் 90 சதவீதமும் ஏற்றம் ஏற்படும்.மேஷம் ராசி பலன்
முன்னேற்றம்
திருமண யோகம்
சொத்து வாங்கும் யோகம்