Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மேஷம் ராசியினர் குடும்பத்தில் உங்களுடைய துணை எங்கேயே இருக்கும் கோபத்தை உங்கள் மேல் காட்டுவார்கள். காதலிப்பவர்களுக்கும் துணை உங்கள் மீது கோபப்படும் அமைப்பு. அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்வது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளை செய்யத் தொடங்குவீர்கள். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது போன்ற நல்ல அமைப்புகள் உள்ளது. நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். கெளரவம் ஏற்படக்கூடிய நல்ல காலகட்டம். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். எதிர்பார்க்காத நன்மைகள், சந்தோஷம் ஏற்படும். பெரும் செல்வாக்கு ஏற்படக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. வண்டி, வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். சமுதாயத்தில் உள்ள பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி அடுத்தடுத்து வேலைகளை முடித்து வைப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்வீர்கள். தெய்வமார்க்க பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம் என எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுடைய பலம் அதிகரிக்கும். பெரிய தொகையைக் கூட சாதாரணமாக புரட்டுவீர்கள். நல்ல நண்பர்களை சந்திப்பீர்கள். நிறைய விஷயங்களை ஒழுங்குபடுத்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்குள் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக்கூடிய யோகம் உண்டாகும். வீடு, சொத்து சுகங்கள் அமையும். வீட்டில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். திருமண யோகம் உண்டாகும். பிரிந்த கணவன், மனைவி மீண்டும் சேருவீர்கள். வரன் அமையும். ஆரோக்கியத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, முதுகுவலி, பின்புற வலி போன்றவற்றில் மிகுந்த கவனம் தேவை. பித்ருக்கள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும். லட்சுமி நாராயணப் பெருமாள் வழிபாடு செய்வது அனுகூலத்தைத் தரும்.மேஷம் ராசி பலன்
வீடு, நிலம் வாங்கும் யோகம்
தொழில்
அனுகூலம்
திருமண யோகம்