Rasi palan this week: மேஷ ராசிக்கு தொட்டதெல்லாம் ஜெயம்.. 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்

  • Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் காலகட்டத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு எதிரிகளை வெல்லும் யோகம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். பெரிய முதலீடுகளை செய்வீர்கள். முதலீடுகள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பணப் பிரச்சனை தீரும். எல்லா விஷயத்தையும் கட்சிதமாக முடிப்பீர்கள்.

    எல்லாமே சாதகம்

    உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெரிய பொறுப்பு, பதவிக்கு வருவீர்கள். அரசாங்கம் தொடர்பான ஆர்டர்கள் கிடைக்கும். அரசாங்க விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களும் சாதகமாக முடியும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    அனுகூலம்

    அழகு, ஆடம்பரம், சந்தோஷம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவியினால் நன்மை ஏற்படும். மனைவியின் ஆரோக்கியம் மேம்படும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நிறைய கடன்கள் முடிவடையும். கொடுத்த பண பாக்கிகள் வந்து சேரும். சூரியன், கேது சேர்வதால் 18 ஆம் தேதி வரைக்கும் பிள்ளைகளால் ஏற்றம் ஏற்படும்.

    கவனம்

    புதிதாக அக்கவுண்ட் ஓபன் செய்வீர்கள். புதிய கோர்ஸ்களை படிக்கத் தொடங்குவீர்கள். ராசியதிபதி 3 ஆம் இடத்தில் அமர்வதால் கணவனாக இருந்தால் மனைவியை வேலை நிமித்தமாக பிரியக்கூடிய சூழல் ஏற்படும். சனி வக்கிரமாக ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். பார்ட்னர்ஷிப்பில் பிரிவுகள், அக்கவுண்டில் இருந்து வந்த பிரச்சனைகள் கண்டுபிடித்து சரி செய்வீர்கள்.

    Advertisement

    வழிபாடு

    நிறைய பயணங்கள் ரத்தாகி தள்ளிப்போய் நடக்கும். செவ்வாய் நீச்சமாவதால் பெருமாள், துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Aries sign during the period from September 14 to September 20 (Aavani 28 to Purattasi 3).