Rasi palan this week: “காத்திருந்த காலம் வந்தாச்சு”.. மேஷம் ராசிக்கு இந்த வாரம் திடீர் பணவரவு

  • Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் மேஷம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) மேஷ ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மேஷம் ராசி பலன்

    மேஷம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சார்ந்த விஷயங்களில் அற்புதமான யோகம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு வருவதற்கான அமைப்பு உள்ளது. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தொலைதூரத்தில் இருந்து அனுகூலம் காணப்படும் அமைப்பு. திட்டமிட்டு செய்யக்கூடிய காரியங்களில் வெற்றி ஏற்படும்.

    Advertisement

    பண வரவு

    வியாபாரத்தில் இருந்து பலவித சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நீண்ட நாட்களாக இருந்த மன கஷ்டங்கள் தீரக்கூடிய நல்ல காலகட்டம். எதிர்பார்க்காத வகையில் பெரிய மனிதர்களின் சந்திப்பு, பெரிய மதிப்பும் ஏற்படும். புதிய பொறுப்புகளுக்கு வருவதற்கான சூழ்நிலை ஏற்படும். திடீர் பண வரவு உண்டாகும். பிரச்சனைகளாக இருந்த விஷயங்கள் சுமூகமாக முடியும்.

    பயணம்

    கெளரவம், வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் பல விஷயங்களில் உங்களுடைய ஆலோசனை தேவைப்படுகிறது என்று பெரிய மனிதர்கள் கூட உங்களை சந்திக்கக்கூடிய, தேடி வரக்கூடிய அமைப்பு ஏற்படும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்களை சந்திப்பது, பயணங்களை மேற்கொள்வது போன்ற நல்ல அமைப்பு உண்டாகும்.

    Advertisement

    வீடு வாங்கும் யோகம்

    இந்த வாரத்தின் இறுதிப் பகுதி அற்புதமாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மனம் ரீதியாக சந்தோஷம் ஏற்படும். மனைவியுடன் இணக்கம் ஏற்படும். மனைவி வீட்டார் மூலமாக பணம் வந்து சேரும். நிலம், வீடு, வண்டி, வாகனம், சொத்துகள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.

    யோகம்

    பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது அமர்ந்திருந்தாலும் பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்படாது. ஆவணங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும். பயணத்தில் தடைகள் இருந்து வந்தால் அவை நல்லதுக்கே என்று நினைக்கவும். சந்தோஷமான வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம் கிடைக்கக்கூடிய அற்புதமான அமைப்பு.

    Advertisement

    வழிபாடு

    ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு சகலவித நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் ஏற்படும். வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள அம்பாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது அதிர்ஷ்டத்தையும், நன்மையையும் தரும். கழுத்து, காது, மூக்கு, தொண்டை பாதிப்பில் கவனம் தேவை.

    English Summary

    Mesham Rasi Weekly Horoscope: Aries natives may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.