மிதுனம் ராசிக்கு அடுத்த 4 மாதம் அமோகம்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்

  • Rasi palan this week: செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன்

    மிதுனம் ராசியினருக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். சுக்கிரன், புதன் பார்வை இருப்பதால் நண்பர்கள், மூத்தவர்கள் மூலமாக நன்மைகள் கிடைக்கும். பெரிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும். வீடு, சொத்துகள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். மணப்பெண்ணாக மாறும் யோகம் ஏற்படும். காதல் கைகூடும். இந்த வாரத்தில் இருந்து 4 மாதங்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    காதல் கைகூடும்

    மாற்றங்களும், ஏற்றங்களும் வரக்கூடிய மாதமாக இருக்கும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும். தடைபடாமல் அனைத்து விஷயங்களும் நடக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். காதல் கைகூடும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் நோக்கி செல்லும் விஷயங்கள் கண்டிப்பாக கிடைக்கும். சுபவிரய பாக்கியம் உண்டு. உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    குருவின் அருள்

    பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியை படிப்பது, கேட்பது நன்மையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

    வழிபாடு

    குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குருவின் பார்வை உள்ளதால் தொழிலில் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது நல்லது. வியாழக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு நல்ல அமைப்பை ஏற்படுத்தித் தரும். சனிக்கிழமையில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும். விரயங்கள் அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை தோறும் உணவு தானமாகக் கொடுப்பது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Mithunam (Gemini) sign during the period from September 28 to October 4 (Purattasi 11 to 17).