Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மிதுனம் ராசியினருக்கு மிகப்பெரிய அனுகூலம் ஏற்படும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய நீச்சமாகி குருவுடன் சேர்ந்திருப்பதால் உஷாராக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. மன அழுத்தம் தீரும். இதுவரை இருந்து வந்த மரண பயம் நீங்கும். உறவுகளுடன் மனம் விட்டுப் பேசுவதை நன்மையைத் தரும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ஆகியை குரு பார்வை இருப்பதால் அடுத்த ஜூன் வரை அற்புதமாக இருக்கும். பதவி உயர்வுகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கிடைக்கும். அரசுத் தொழிலில் மாற்றத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயர் புகழ் கிடைக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழிலில் ஏற்றம் பெறுவீர்கள். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். காசு, பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே இணக்கம் அதிகரிக்கும். விட்டுச் சென்ற காதலன், காதலி மீண்டும் வருவார்கள். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். மனதில் சந்தோஷம் ஏற்படும். நட்பு வட்டாரங்கள் அதிகரிப்பார்கள். அம்மாவுடைய ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முதுகுத் தண்டுவடம், பின்புறங்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நுரையீரலில் நீர் கோர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. ராசியாதிபதி பஞ்சம ஸ்தானத்தில் இருப்பதால் நிறைய சுப காரியங்கள் நடக்கும். நீச்சம் பெறக்கூடிய செவ்வாயால் சிலருக்கு பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கையில் சிறு பாதிப்புகள் வரும். குடும்பத்திற்குள் பேசும்போது வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.மிதுனம் ராசி பலன்
குரு பார்வை
யோக பலன்கள்
கவனம்
வழிபாடு