Rasi palan this week: செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரையிலான (ஆவணி 21 முதல் 27) காலகட்டத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். மிதுனம் ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். துர்க்கை வழிபாடு நம்பிக்கையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ரத்தபந்த உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கல் பரிபூரண நிவர்த்தியாகும். பெரும் நம்பிக்கை ஏற்படும் காலகட்டம். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உத்தியோகத்தில், வியாபாரத்தில், தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். மன பயங்கள் தீரும். மன அழுத்தத்திற்கு மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சையை பெறுவது நல்லது. படிப்பு, எழுத்து, ஓவியம், வங்கி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். அக்கவுண்டசி, ஆடிட்டிங், டேட்டா தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் விஷயம் நன்றாக இருக்கும். காதலன், காதலியை சந்திக்கும் பாக்கியம் உண்டு. எந்த விஷயத்தை எடுத்தாலும் அவை தடையின்றி நடக்கும். முக்கியமான பொறுப்புகள் உங்களுக்கு சாதகமாக முடியும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். நினைத்ததை விட பல விஷயங்கள் சாதகமாக நடக்கும். நல்ல பணம், காசு, வருவாய் உண்டாகும். தள்ளிப்போன காரியங்கள் கூட இனி வேகமாக நடக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு அற்புதமான பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். இடம் மாறுவது, வீடு மாறுவது, வீடு வாங்குவது போன்ற யோகம் உண்டு. சந்தோஷம் அதிகரிக்கும். சுக ஸ்தானம் அற்புதமாக இருக்கும். கட்டில், மெத்தை போன்ற விஷயங்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சியுடனும், ஆடம்பரத்தோடும் வாழும் அமைப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருப்பது நல்லது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும்.மிதுனம் ராசி பலன்
யோக பலன்கள்
குழந்தை பாக்கியம்
பணவரவு
வீடு வாங்கும் யோகம்