அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மேஷ ராசிக்கு லாபத்தை அள்ளும் நேரம்

  • Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷப ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

    அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அரசியலில் பெயர், புகழ் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தில் புதிய கெளரவம் உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் உண்டாகும்.

    லாபம் கொட்டும்

    ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு. குடும்பத்தில் செவ்வாய் நீச்சமாக இருப்பதால் துணை விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. அந்நியர்கள் உங்கள் குடும்ப விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படும்.

    Advertisement

    தொழிலில் ஏற்றம்

    தொழிலில் நன்றாக கவனம் செலுத்துவது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். சூரியன் 6 இல் இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும். நீச்சபங்க ராஜயோகம் ஏற்படும். மருத்துவர்களுக்கு பெரிய கெளரவம் உண்டாகும். மீடியா, மருத்துவத் துறை, சினிமாவில் இருப்பவர்களுக்கு விருதுகள் கிடைக்கும். நல்ல பெயர், புகழ் கிடைக்கக்கூடிய அற்புதமான வாரமாக அமையும்.

    கடன் தீரும்

    யோகமான காலகட்டமாக இருக்கும். 6 ஆம் இடத்தில் சுக்கிரன் வக்கிரம் அடைகிறார். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தேங்கிக் கிடந்த வேலைகள், நிதி சார்ந்த விஷயங்களை எல்லாம் முடிப்பீர்கள். சூரியன் இந்த வாரத்தின் இறுதியில் இடம் மாறுவதால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    Advertisement

    ஆரோக்கியம்

    பின்புற வலி, முதுகு வலி போன்றவை சரியாகும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். செவ்வாய், குரு இணைவதால் வீடு, நிலம், சொத்துகள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். இளைய சகோதரன், சகோதரி, மைத்துணன் வகையில் நரம்பு, மூளை தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

    வழிபாடு

    இடமாற்றம் வந்தால் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 16, 17 ஆம் தேதி அதிகளவிலான டென்ஷன் அதிகமாவதற்கான வாய்ப்பு ஏற்படும். பயணங்களின்போது நிறைய தவறுதலும், மறதியும் வருவதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷமும் பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் வழிபாடு செய்வது நன்மையைத் தரும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Rishabam (Taurus) sign during the period from october 12 to 18 (Purattasi 25 to Aippasi 1).