Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். ரிஷபம் ராசியினருக்கு பழைய கடன்களை அடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பழைய நட்பின் மூலமாக வரும் பிரச்சனைகளை முடித்து வைப்பீர்கள். குடும்பத்தில் உள்ள இளைய சகோதரன், சகோதரிக்கு திருமணமாகும். கடன் கேட்டு கிடைக்காதவர்களுக்கு லோன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை அதிகரிக்கும். சர்க்கரையை தவிர்ப்பது, உணவில் டயட்டை கடைப்பிடிப்பது போன்றவற்றை செய்வீர்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உணவால் பிரச்சனை ஆவது, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பணம், காசுக்கு தட்டுப்பாடு இருக்காது. கணவனாக இருந்தால் மனைவியும், மனைவியாக இருந்தால் கணவரும் கம்யூனிகேஷனில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. வழக்குகளிலும், எதிரிகள் விஷயத்திலும் வெற்றி ஏற்படும். நிறைய யோக பலன்கள் கிடைக்கும். எதிர்பார்க்காத நன்மைகள், அனுகூலம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் துணை, துணைவியாரின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். இஷ்ட தெய்வம், மகான்கள் தரிசனத்தை மேற்கொள்வீர்கள். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். சிக்கல்கள், பாதிப்புகள் நீங்கும். நிறைய சந்தோஷங்கள் ஏற்படும். பலம் பெறக்கூடிய காலகட்டம். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த நாட்டுக்கு வந்து செட்டிலாகும் அமைப்பு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். கடன்கள் தீரம் அமைப்பு உள்ளது. பண வரவு அற்புதமாக இருக்கும். அண்ணன், தம்பி, மச்சான் ஆகியோரின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். சிவனுக்கு அபிஷேகத்திற்கு கொடுப்பது பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.ரிஷபம் ராசி பலன்
பணவரவு
யோக பலன்
அனுகூலம்
வழிபாடு