Rishabam: ரிஷப ராசிக்கு புதிய முயற்சிகளில் வெற்றி.. சொல்லி அடிக்கும் நேரம்

  • Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷபம் ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. நல்ல லாபங்கள் காணப்படும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். நிறைய வெற்றிகள் ஏற்படும். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத நன்மைகள், ஆனந்தம் ஏற்படும்.

    அனுகூலம்

    உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு ரீதியாக நிறைய நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்த விஷயங்கள் எல்லாம் மாறி சந்தோஷமும், ஏற்றமும் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டம். அடுத்தடுத்து நிறைய நல்ல விஷயங்கள் நடைபெற்று யோக பலன்கள் கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் வெற்றி ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அதீத கவனம் தேவை.

    Advertisement

    ஆரோக்கியம்

    பஞ்சம ஸ்தானம் வலுவில்லாத நிலைமையில் இருப்பதால் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் பிரச்சனை செய்வது, உங்களுக்கு எதிராக மாறுவது, நீங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற நிலைமைகள் இருக்கும். அப்பா, மூத்த மகனின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    திடீர் மாற்றம்

    உண்மைக்குப் புறம்பான சம்பங்கள், தவறான தகவல் தொடர்புகள் இந்த வாரம் முதல் தொடங்குவதால் கவனம் தேவை. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகள் நன்றாக செட்டாகும். எந்த விஷயத்தை திட்டமிட்டாலும் அவை வெற்றி பெறும். சில விஷயங்கள் தள்ளிப்போய் நடந்தாலும் அதில் நல்ல ஆதாயம் காணப்படும்.

    Advertisement

    முயற்சிகளில் வெற்றி

    புதிய முயற்சிகள் எதை எடுத்தாலும் அவற்றை கைவிடாமல் இருப்பது நன்மை பயக்கும். நல்ல செய்தி வந்து சேரும். செப்டம்பர் 18 முதல் நிறைய நல்ல செய்திகள் வந்து சேரும். அக்டோபர் 2 முதல் அற்புதமான விஷயங்கள் நடக்கும். தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். கடன் வாங்குவீர்கள். வீட்டில் நிறைய சுப காரியங்கள் நடக்கும்.

    வழிபாடு

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். வெள்ளிக்கிழமையில் விநாயகர் பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு, முதுகு தொடர்பான பாதிப்புகள் வரும் என்பதால் முறையான உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rishabam Rasi Weekly Horoscope: Rishabam (Taurus) natives may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.