சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் பெறும் சிம்மம்.. தொட்டதெல்லாம் துலங்கும் காலம் ஆரம்பம்

  • Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    சிம்மம் ராசி பலன்

    சிம்மம் ராசியினருக்கு கோயில், பூஜை, புனஸ்காரம், ஆன்மீகம் என இருக்கக்கூடிய யோகம் ஏற்படும். பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் தன்மை உண்டாகும். பெரிய பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். தெய்வத்தின் அனுகூலம் ஏற்படும். சிம்மத்தில் பிறந்திருக்கும் பீடாதிபதிகள், மடாதிபதிகள், ஆன்மீகவாதிகள், சொற்பொழிவாளர்கள் நவம்பர், டிசம்பர் மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    ஆரோக்கியம்

    மூக்கில் பிரச்சனை வருவது, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வரக்கூடிய சூழ்நிலை உள்ளதால் கவனம் தேவை. நிறைய பேருக்கு சுப காரியங்கள் நடக்கும். குரு கேது சேரும்போது சிம்மம், மேஷம், தனுசு ராசியில் பிறந்திருந்தாலும் இதயம், கொழுப்பு தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம்.

    Advertisement

    முன்னேற்றம்

    பெண் குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டாகும். நிறைய நல்ல விஷயங்கள் உண்டாகும். போராட்டத்தில் இருந்து வெளியில் வந்து மன அமைதியைப் பெறுவீர்கள். ஏராளமான சந்தோஷங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நிலம், ரெஜிஸ்டிரேஷன், வீடு கட்டுவது, நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைப்பது என யோகம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

    கவனம்

    பிள்ளைகள் சார்ந்த விஷயங்கள், அவசரகதியில் செய்யும் விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. அதிசாரத்தில் இருக்கும் குரு தேவைில்லாத சங்கடத்தை ஏற்படுத்தும். நீச்சத்தில் இருக்கும் சூரியன் தொழில், வருமானத்தை கெடுக்கும் வாய்ப்புள்ளதால் எந்த விஷயங்களைச் செய்தாலும் கவனத்தோடு செய்ய வேண்டும்.

    Advertisement

    குலதெய்வ வழிபாடு

    உங்களுடன் இருப்பவர்களே எதிராக செய்து கொடுக்கும் நிலை உள்ளது. அதேபோல, உங்களுக்கு கீழ் இருப்பவர்களே எதிராக திரும்புவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. குலதெய்வத்தை மானசீகமாக வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும் பாதம், முட்டி வலி தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

    100க்கு 80 மார்க்

    எல்லா விதமான சந்தோஷங்களும் அதிகளவில் நடக்கும். அக்டோபர் 27, 28, 29 ஆம் தேதிகளில் பெரிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்மைகளைத் தரும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Simmam (Leo) sign during the period from October 26 to November 1.