சிம்ம ராசிக்கு இனி மாஸ் மாற்றம்.. வீடு, கார், சொத்து யோகம் என அதிர்ஷ்டம் உச்சம்!

  • Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும்.

    அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    சிம்மம் ராசி பலன்

    சிம்மம் ராசியினருக்கு விரயத்தில் இருக்கும் செவ்வாய் நீச்சமாகியுள்ளார். குரு சந்திரன் சேர்ந்து விரயத்தில் நீச்சபங்க யோகம், அஷ்டமத்தில் சனி உள்ளது. பயணங்களின்போது மிகுந்த கவனம் தேவை. பெரியவர்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளை பார்த்துக் கொள்வது நல்லது. ராசியதிபதி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சந்திரன் தொடர்பில் இருப்பதால் சளி பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது.

    ஆரோக்கியம்

    தலைவலி, சைனஸ், ஒற்றை தலைவலி, கண் தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பித்ரு காரியங்கள் சரியாக செய்பவர்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. உபஜெய ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் உள்ளனர். அதில், சுக்கிரன் வக்கிரமடைவது நன்மையைத் தரும். இளைய சகோதரன், சகோதரிகளுக்கு திருமண யோகம் உண்டாகும்.

    Advertisement

    யோகம் கொட்டும்

    வண்டி வாகனங்கள் யோகம் ஏற்படும். இடமாற்றங்கள் வரும். பழைய நட்புகள், விவகாரங்கள் எது இருந்தாலும் திரும்பி வரும். வீடு வாங்குவது, சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். குரு அதிசாரமாக மாறுவதால் சிம்மத்திற்கு நல்ல நேரம் ஆரம்பிக்கும். பெரிய ஏற்றமும், சந்தோஷமும் ஏற்படும். நிறைய நல்ல காரியங்களைத் தொடங்குவீர்கள்.

    வழிபாடு

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். தொட்டது துலங்கும் நல்ல காலகட்டம். தடைகள் எல்லாம் தவிடு பொடியாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது, லட்சுமி நாராயணப் பெருமாள், லட்சுமி நரசிங்கப் பெருமாளுக்கு வஸ்திரம் சாற்றுவது, அபிஷேகம் சாற்றுவது நன்மைகளை அள்ளித் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Simmam (Leo) sign during the period from october 5 to 11 (Purattasi 18 to 24).