Rasi palan this week: செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும். இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். சிம்மம் ராசியினர் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது பார்த்து இயக்குவது, வேகத்தைக் குறைப்பது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் இருந்து இழுபறிகள் நீங்கும். பெரும் செல்வாக்கு ஏற்படும். இழுபறியாக இருந்த அமைப்பு படிப்படியாக மாறும். இந்த மாதத்தில் வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் வார்த்தைகளில் ஆக்ரோஷம், கோபத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. மருத்துவம், மீடியா, கலை, ஏஐ துறையைச் சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும். சனிக்கிழமைகளில் பெருமாள், தாயாரை வழிபாடு செய்வது நன்மையைத் தரும். உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக எந்தவித பிரச்சனைகளிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். வெளியூர், வெளிநாடு பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் பேசிக்கொண்டு ஜாலியாக இருப்பீர்கள். சுற்றுலா செய்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். கண் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமான முடிவுகள் தள்ளிப்போனாலும் நிச்சயமாக நடக்கும். அஷ்டமத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் விலங்குகளிடம் இருந்து தள்ளியிருப்பது நன்மை பயக்கும். எந்த விலங்காக இருந்தாலும் அவை உங்களுக்கு ஆபத்தை தரும் வாய்ப்புள்ளது. 30 ஆம் தேதி வரை நிறைய பயணங்கள் மேற்கொள்வது, சந்தோஷமான விஷயங்கள், குடும்ப வாழ்க்கை அமையும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களை நம்பி பணம் கொடுப்பது, உதவி செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. முதலீடு செய்யும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். ,ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு சகலவித முன்னேற்றங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.சிம்மம் ராசி பலன்
தொழில்
பணவரவு
அனுகூலம்
வழிபாடு