Rasi Palan This Week: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். சிம்ம ராசி, லக்கினம் சார்ந்தவர்களுக்கு நிறைய விரயம் ஏற்படும் அமைப்பு உள்ளது. உத்தியோகம், வியாபாரம், படிப்பில் பதட்டம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருப்பவர்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். ஆவேசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உறவுகளை புதுப்பித்துக் கொள்வது நல்லது. கடனை நினைத்து எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு நிச்சயமாக தீர்வு ஏற்படும். அஷ்டமத்தில் இருக்கும் சனி வக்கிர சனியாக இருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்கள் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். கணவன்மார் உறவினர்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். காதல் அமைப்பில் அனுகூலம் காணப்படும். திருமண உறவுகளில் பாதிப்பும் ஏற்படும் என்பதால் அதீத கவனம் தேவை. சூரிய பகவானை நினைத்து எல்லா கடவுள்களையும் வழிபாடு செய்வது நன்மை பயக்கும். நீங்கள் செய்யும் காரியங்கள் தள்ளிப் போய் நடக்கும். கால் முட்டியில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்களால் அவமானங்கள், அவஸ்தைகள், பெண்களால் பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். டென்ஷன், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்கள் ஏற்படும். முக்கியமான கம்யூனிகேஷன்கள் பெண்கள் மூலமாக வரும். நினைத்தது கண்டிப்பாக நடக்கும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். ஏற்றம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். உங்களுடைய லட்சியங்களை நோக்கி பயணிப்பீர்கள். ஆவணி மாதத்தில் இருந்து நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும் காலகட்டமாக இருக்கும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும். சிவபெருமான் வழிபாடு அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.சிம்ம ராசி பலன்
குழப்பம்
கவனம்
வழிபாடு