Rasi Palan This Week: அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. தொழில் விஷயத்தில் ரொம்ப கவனம்

  • Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    சிம்மம் ராசி பலன்

    சிம்ம ராசியினருக்கு காதல் கைகூடும். குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள், பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இன்பச் சுற்றுலா, ஆடம்பர சுற்றுலா சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். புத்துணர்ச்சிக்காக ஆயுர்வேத சிகிச்சைக்குச் சென்று வருவீர்கள். லாப ஸ்தானத்தில் புதன் இருப்பதால் நண்பர்கள் மூலம், பொருளாதாரத்தின் மூலம் லாபம் ஏற்படும்.

    Advertisement

    முன்னேற்றம்

    எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். விரயத்தில் இருக்கும் சூரியன், குரு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொடுப்பார். புதிய கடன்கள் கிடைக்கும். அரசு வங்கியில் இருந்து கடன் கிடைக்கும். வெளியூர் பயணம் ஏற்படும். வெளிநாடுகளில் செட்டிலாகக் கூடிய யோகம் உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் பிரச்சனைகள், டென்ஷன், கோபம் போன்றவை ஏற்படும்.

    யோக பலன்

    யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். விரயங்கள் அதிகமாக ஏற்படும். விலை உயர்ந்த பொருள்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தை ஏற்படுத்தும். மனதில் இருந்த இனம் புரியாத பயம் நீங்கும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். பிடித்த கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.

    Advertisement

    கவனம்

    துணை, காதல் அமைப்பில் ஏற்றம் ஏற்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என்ற எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரண நிவர்த்தியாகும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். பதற்றத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

    வழிபாடு

    கடையில் ஏதாவது திருட்டு போவதற்கான வாய்ப்புள்ளது. வாரத்தின் இறுதிப் பகுதி சாதகமான தன்மையை ஏற்படுத்தும். சந்தோஷமாக இருக்கும் காலகட்டம். பெரிய ஆற்றல், நம்பிக்கையோடு இருப்பீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அடிவயிறு, கழிவுப் பாதையில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். பத்மநாபன் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the simmam rasi people during this week of July 27 to august 2 (Aadi 11 to 17).