துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கை.. பணவரவு, முயற்சிகளில் வெற்றி.. இந்த வாரம் எப்படி?

  • Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

    அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சுக்கிரன் வக்கிரமடைகிறார், புதனோடு சேர்ந்திருக்கிறார். பெண்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சளி பிடிக்கும் வாய்ப்புள்ளது. பண வரவு அற்புதமாக இருக்கும். சிக்கலாக இருக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் எளிமையாக முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    யோகம் கொட்டும்

    புதன், சுக்கிரன் சேர்வதால் லட்சுமி நாராயண யோகம் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் ஏற்படும். விரயத்தில் சூரியன் இருப்பதால் ஆரோக்கியப் பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். நிம்மதி இல்லாத தன்மை தீரும். ஆஸ்துமா, சைனஸ் போன்றவை சரியாகும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சூரியன் நீச்சமடைந்தாலும் சனி பார்வையில் இல்லை என்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.

    Advertisement

    விருதுகள்

    விருதுகள், அங்கீகாரம், பெயர், புகழ் கிடைக்கக்கூடிய காலகட்டம். பெரிய பிரச்சனைகள், பாதிப்புகள் எதுவும் இந்த வாரத்தில் ஏற்படாது. பெரிய பெரிய விஷயங்களையும் எளிமையாக சாதிப்பீர்கள். எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். சந்தோஷமான விஷயங்கள் நடைபெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

    கவனம்

    ஐப்பசி மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நரம்பு, கண் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், அலர்ஜி, மூட்டுவலி போன்றவற்றை பார்த்துக் கொள்வது நல்லது. திங்கள்கிழமை தோறும் சிவனுக்கு நல்லெண்ணெய், அருகம்புல், வில்வம் கொடுப்பது நன்மை பயக்கும். மேலதிகாரிகள் விஷயத்தில் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    முன்னேற்றம்

    இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் உண்டாகும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையின் பெரிய பெயர், புகழைப் பெறுவார்கள். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

    வழிபாடு

    மேலதிகாரிகளுடன் தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அனுமனை வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா படிப்பது மேன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும். லட்சுமி, ரங்கநாத சுவாமி வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Thulam (Libra) sign during the period from october 12 to 18 (Purattasi 25 to Aippasi 1).