துலாம் ராசி: நீண்ட நாள் கவலைக்கு முற்றுப்புள்ளி.. அக்.26 முதல் அதிர்ஷ்டம் தரும் கிரகங்களின் ஆட்டம்

  • Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    துலாம் ராசி பலன்

    12 ராசிகளில் இந்த வாரத்தில் அமோகமான பலன்களை துலாம் ராசியினர் பெறப் போகின்றனர். பெரும் புகழ், பெயர், கெளரவம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். எதிர்பார்க்கும் எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். குடும்பத்துக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும். நிறைய பணங்கள் வந்து சேரும்.

    லாபத்தில் குரு

    மருத்துவதுக்கு செல்ல வேண்டும் என நினைப்பவர்களுக்கு, மருத்துவக் கல்வி பயில நினைப்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் குரு வருவதால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். மன சந்தோஷங்கள் அதிகரிக்கும். ஆடம்பரமான விஷயங்களை அதிகமாக செய்வீர்கள்.

    Advertisement

    நல்ல செய்தி

    27, 28, 30, 31 ஆகிய தினங்கள் உங்களுக்கு நல்ல அமைப்பைத் தரும். மேலதிகாரிகள், உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். லாபத்தின் அளவு பன்மடங்காக உயரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

    சிக்கல் தீரும்

    பெரும் செல்வாக்கு, சந்தோஷம் ஏற்படக்கூடிய அமைப்பு. இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலன்களை அதிகளவில் பெற்றுத் தரக்கூடிய காலகட்டம். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம் ரீதியாக சிறிது அமைதி காப்பது நல்லது.

    Advertisement

    வழிபாடு

    முதுகு வலி அதிகளவில் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. தேவையில்லாத மன அழுத்தங்களை உங்களுக்குள் வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதை தவிர்ப்பது நல்லது. துணையுடன் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுப்பார். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 98 சதவீதம் அற்புதமாக நடக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Thulam (Libra) sign during the period from October 26 to November 1.