துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சம்.. தொழில், வேலை, பணவரவில் முன்னேற்றம்

  • Rasi palan this week: அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும்.

    அந்த வகையில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 18 முதல் 24 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு நிறைய விரயமும், அலைச்சலும் உண்டாகும். குடும்பத்தில் துணை, பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் நிறைய பிரச்சனைகளால் கவலைகள், மனக்கஷ்டம் ஏற்பட்டிருக்கும். அவை அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. தொழில், உத்தியோகம் வியாபாரம், படிப்பு ரீதியாக இருந்து வந்த அனைத்து சங்கடங்களும் நீங்கும்.

    தொழில்

    சினிமா, மீடியா, கலைத் துறையில் இருப்பவர்கள் பெரிய விருதுகளைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்து விலகி தனித் தொழில் தொடங்குவீர்கள். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். வண்டி வாகனத்தில் நிறைய நல்லவை நடக்கும். மிகப்பெரிய சந்தோஷங்கள் காணப்படும்.

    Advertisement

    யோகம்

    யோகமான காலகட்டமாக இருக்கும். புதன் சுக்கிரன் சேர்ந்து லட்சுமி நரசிம்ம யோகத்தை கொடுக்கிறது. 10 ஆம் இடத்தில் நீச்சம் பெறக்கூடிய செவ்வாய் குருவோடு சேர்ந்திருக்கிறது. 10 ஆம் இடத்தில் நீச்சம் பெறக்கூடிய செவ்வாய் குருவோடு சேர்ந்திருக்கிறது. நிறைய பேருக்கு உபதேசம் செய்யக்கூடிய தொழில் அமையும். அரசுத் துறையில் வேலைவாய்ப்பு கிடைப்பது, மத்திய அரசு வேலை கிடைப்பது போன்ற அமைப்பு உள்ளது.

    ஆரோக்கியம்

    மெடிஷன் சீட் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் கடல் பிரதேசங்களை ஒட்டி கிடைப்பதற்கான அமைப்பு. சிவில் கன்ஸ்டிரக்ஷன், இன்ஜினியரிங் துறையில் இருப்பவர்கள்கு அற்புதமான யோகம் உண்டாகும். முதுகு வலி, பின்பக்க வலிகள் வர வாய்ப்புள்ளது. உங்களுடைய மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் சில பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.

    Advertisement

    முன்னேற்றம்

    புதிதாக தொடங்கும் விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியத்தில் தோல் பிரச்சனை, தொடைப் பகுதி, அடிவயிறு, மறைவு ஸ்தானங்களில் சில பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. பயணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தெய்வ அனுக்கிரகம் ஏற்படும். பெண்கள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.

    வழிபாடு

    சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் மிக அதிகமாக இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பிள்ளைகளின் ஆரோக்கியம், அப்பாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொல்வது நன்மை பயக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும். உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Thulam (Libra) sign during the period from october 5 to 11 (Purattasi 18 to 24).