கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. துலாம் ராசிக்கு இந்த வாரம் வரும் அதிர்ஷ்டம்

  • Rasi palan this week: செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 11 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு நட்பு வட்டாரங்கள் விரிவடையும். நண்பர்களால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பொறுப்புகள், அழகு அதிகரிக்கும். வீட்டில் மருந்து, மாத்திரை செலவு, மருத்துவமனை செலவு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலை, தொழில், வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. நிறைய பயணங்களை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும்.

    வருமானம் பெருகும்

    அழகான நிறைய விஷயங்களை பார்ப்பீர்கள். வருமானத்திற்கான வழிகளை சரியாகக் கண்டறிவீர்கள். செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் நிறைய நல்ல விஷயங்கள் முடியும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். உறவுகளுக்குள் சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

    Advertisement

    முன்னேற்றம்

    உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இயற்கையாக இருந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். விரயங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் சுப விரயமாக மாற்றிக்கொள்ள வேண்டும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்கள் உதவி தேவைப்படும்.

    வழிபாடு

    பிள்ளைகளை அரவணைத்துச் செல்வது நல்லது. இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்ததியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். செவ்வாய்க்கிழமையில் பெருமாள், தாயார் வழிபாடு, லட்சுமி நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மனநிம்மதியை ஏற்படுத்தும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Thulam (Libra) sign during the period from September 28 to October 4 (Purattasi 11 to 17).