Thulam: துலாம் ராசிக்கு துணை நிற்கும் சுக்கிரன்.. அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது.. இதில் மட்டும் கவனம்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு வேலை, தொழில், அந்தஸ்து, உத்தியோகம், வியாபாம் என அனைத்தும் அருமையாக இருக்கும். நீண்ட தூர பயணங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வெளியூர், வெளிநாடுகள் மூலமாக நல்ல விஷயங்கள் நடக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். விரயத்தில் இருக்கும் சுக்கிரனால் நிறைய சுப செலவுகளைச் செய்வீர்கள்.

    Advertisement

    சொந்த வீடு யோகம்

    வாகன பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு யோகம் ஏற்படும். பெண்களுக்கு தேவையான ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். நிறைய விஷயங்கள் உங்களுக்கு சதாகமாக நடக்கும். திறன்பட சமாளித்து ஜெயிக்கக்கூடிய நல்ல காலகட்டம். எல்லா விஷயத்திலும் சந்தோஷமும், தைரியமும் ஏற்படும். முயற்சி செய்யும் காரியங்கள் கைகூடும்.

    கவனம்

    மன அழுத்தத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி செய்யாத அளவுக்கு சோம்பலாகி விடுவீர்கள். யார் எதை கூறினாலும் கோபம், மன அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்கள் உங்களை கேலி, கிண்டல் செய்வதாக நினைத்து உங்களை வருத்திக் கொள்வீர்கள். சனி வக்கிரமாகியுள்ளது, 3க்கும் 6க்கும் உள்ள குரு உச்சமாகியுள்ளதால் எதிர்மறையான சிந்தனைகள் தோன்றும்.

    Advertisement

    வழிபாடு

    அன்பை முறிப்பது, சோதிப்பது போன்றவற்றை செய்வீர்கள். தேவையில்லாதவர்களுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களுக்காக இருப்பவர்களை உதாசீனப்படுத்தக் கூடிய காலகட்டம். அதனால் நிரந்தர வருத்தம் ஏற்படும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. விநாயகர் வழிபாடு, நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். எல்லா விதத்திலும் ஏற்றம் உண்டாகும்.

    மதிப்பெண்

    தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட அனுகூலம் காணப்படும். ரத்தத்தில் குறைபாடு, ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Thulam rasi people during this week of August 10 to 16.