Rasi Palan This Week: புதனின் அருளால் திடீர் அதிர்ஷ்டம் பெறும் துலாம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்

  • Weekly Rasi Palan: ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதியான நேற்று ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி (ஆடி 11 முதல் 17 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன்

    துலாம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். எதிர்பார்க்காத அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் ஏற்படும். முட்டி, முதுகு வலி சுழுக்கு போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    யோக பலன்

    பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட தேவையில்லா சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். உறவுக்குள் இருந்து வந்த சிக்கல் தீரும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வாகனத்தில் அனுகூலம் ஏற்படும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நம்பிக்கையும், அனுகூலங்களும் ஏற்படும்.

    பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அப்பா, மகனுக்கு வளர்ச்சி ஏற்படும். புதனின் அருளால் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். கம்யூனிகேஷன் நன்றாக இருக்கும். நல்ல எண்ணங்கள் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைவாய்ப்பு கிடைக்கும். பழைய நண்பர்கள் உங்களிடம் பேசுவார்கள். வழக்குகளில் தீர்வு கிடைக்கும். கூடா நட்பை தவிர்ப்பது நல்லது. விட்டமின் குறைபாடுகளை பார்த்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    வழிபாடு

    தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். அதீத குழப்பம், டென்ஷன் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். கஉறவுக்குள்ளாக இருந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த கஷ்டம் தீரும். தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நம்பிக்கை ஏற்படும். குருவாயூர் கிருஷ்ணர் வழிபாடு நரசிம்மர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Thulam rasi people during this week of July 27 to august 2 (Aadi 11 to 17).