Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும். இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். துலாம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் படிப்பு மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். துணைக்கும் உங்களுக்கும் இருந்த மன வருத்தங்கள் தீரும். டிசம்பர் மாதம் வரை பிள்ளைகளால் தேவையில்லாத மனக் குழப்பமும், சங்கடங்களும் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம் என நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். அலர்ஜி, ஹார்மோன் குறைபாடுகளில் மிகுந்த கவனம் தேவை. ஆண்கள் முதுகு வலி, பாத வலி, மூட்டு வலிகளில் மிகுந்த கவனம் தேவை. தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். பேசிக்கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. சுக்கிரன் நல்ல நிலைமையில் இருப்பதால் பண வரவு அற்புதமாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காரியங்களை கொஞ்சம் குறைத்துக் கொண்டு, பணத்தில் கவனம் செலுத்துவது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தடையில்லாமல் நல்ல காரியங்கள் நடக்கும். வீடு வாங்குவது, சொத்துகள் வாங்குவது, கிரயம் செய்வது போன்ற யோகம் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அழகு, ஆடம்பரம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிக்கும், காதல் கைகூடும். காதல் திருமணம் நடக்கும் யோகம் உண்டாகும். பொறுப்பான விஷயங்களில் மட்டும் பணத்தை முதலீடு செய்வது நன்மை பயக்கும். இல்லையெனில் நீங்கள் செய்யும் முதலீடுகளில் தடைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். வருமானங்களில் கவனம் செலுத்துவது அற்புதமான முன்னேற்றங்களைத் தரும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்ட காரியங்கள் துலங்கும் யோகம் ஏற்படும். தொழிலில் பெரிய கெளரவம் உண்டாகும். நிலம், வீடு வாங்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். சுதர்சனர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.துலாம் ராசி பலன்
பொருள் சேர்க்கை
பணவரவு
காதல் திருமண யோகம்
வழிபாடு