விருச்சிக ராசியினருக்கு வீடு, நிலம் வாங்கும் கனவு நனவாகுமா?.. அக்.26 முதல் புதிய திருப்பம்

  • Rasi palan this week: அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 9 ஆம் தேதி முதல் ஐப்பசி 15 வரை) காலகட்டத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என்று மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். லாபத்தின் அளவு பன்மடங்காக அதிகரிக்கும். பெரும் செல்வாக்கைப் பெறக்கூடிய காலகட்டம். வயிறு, அசிடிட்டி, ஜீரணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும்.

    வெளிநாடு யோகம்

    தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய நல்ல காலகட்டம். நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டம். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். குரு 10 ஆம் இடத்துக்கு வருவதால் இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும்.

    Advertisement

    வீடு கட்டும் யோகம்

    வழக்குகள் சாதகமாக முடியும். வழக்கறிஞர், நீதிபதிகளை சந்திக்கும் அமைப்பு ஏற்படும். வேறு ஊரில் வீடு கட்டுவது, நாட்டில் வீடு கட்டுவது போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை மாறுவதில் ஆர்வம் அதிகளவில் இருக்கும். 29, 30 ஆகிய நாட்கள் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. செலவுகள் மற்றும் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சொத்துக்கள் சேரும்

    வீடு வாங்குவது, சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். விநாயகர் வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Viruchigam (Scorpio) sign during the period from October 26 to November 1.