Viruchigam: அதிர்ஷ்டம் கதவை தட்டப் போகுது.. விருச்சிகம் ராசிக்கு 90% அதிர்ஷ்ட வாரம்

  • Rasi palan this week: செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.

    இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 12 முதல் 17 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு எதிரிகள் சிறிது பலமாக இருக்கக்கூடிய காலகட்டம் என்பதால் கொஞ்சம் இணக்கமாகச் செல்வது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். உறவுக்குள் கோபத்தை தவிர்ப்பது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு நிமித்தமாக எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும்.

    முன்னேற்றம்

    பெரும் செல்வாக்கு ஏற்படும். நிறைய விஷயங்கள் உங்களுக்கு கைகொடுக்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல லாபங்கள் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிய வேலைக்குச் செல்வீர்கள்.

    Advertisement

    வெளிநாடு வேலை

    வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். அலுவலகத்தில் பெரிய பதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய விஷயங்கள் எல்லாமே நடக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதனை ஜெயிக்கும் வரை கைவிட மாட்டீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். செவ்வாய், குரு இணைந்துள்ளதால் பூர்வீக சொத்துகளை இடித்துக் கட்டுவது, கோயில் கட்டுவது, நிலத்தை விற்றுவிட்டு புதிய கட்டடம் கட்டுவது போன்ற அமைப்பு உண்டாகும்.

    சுபச்செலவுகள்

    விரயத்தில் புதன் சுக்கிரன் இருப்பதால் சுபச் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை செய்து மகிழ்வீர்கள். பெண்களுக்குத் தேவையான வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். கழிவுப் பாதை, ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    Advertisement

    வழிபாடு

    வெள்ளிக்கிழமை மதிய வேளைகளில் உணவு தானமாகக் கொடுப்பது எதிர்பார்க்காத நன்மைகளை ஏற்படுத்தும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது சிறந்த பலன்களைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நந்றாக நடக்கும். அரங்கநாதர் வழிபாடு சகலவித முன்னேற்றங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Viruchigam (Scorpio) sign during the period from September 28 to October 4 (Purattasi 11 to 17).