Viruchigam: ஹீரோவாக மாறும் விருச்சிக ராசி.. ஆவணி 16 வரை 3 கிரகங்கள் தரும் அதிர்ஷ்டம்

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறந்துள்ளது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி (ஆடி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு பிஸியான வாரமாக இருக்கம். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு அமர்ந்திருப்பதால் ஆவணி மாதம் 16 ஆம் தேதி வரை அற்புதமான காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் எல்லாம் தானாக நடக்கும். கல்லூரியில் சீட் கிடைப்பது, உயர்கல்வி போன்றவை சாதகமாக இருக்கும். இளைய சகோதரர் வண்டியில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

    Advertisement

    ஆரோக்கியம்

    பெற்றோர், பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பரம்பரை நோய், இதய நோய், ரத்தத்தில் பிரச்சனைகள் இருந்தால் கவனம் தேவை. எதிரிகள் உருவாகி பலப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம், படிப்பு, உத்தியோகம், வாக்குவாதம் போன்றவற்றில் கவனம் தேவை.

    சுபகாரியம்

    குரு உச்சமாகி இருப்பதால் காது, மூக்கு, தொண்டை, அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகள் குலதெய்வத்தை மனதார தினந்தோறும் வழிபாடு செய்வது நன்மையைத் தரம். தேவையில்லாத சங்கடங்களில் இருந்து விடுபடுவது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றங்கள் காணப்படும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும்.

    Advertisement

    பரிகாரம்

    எல்லா சுபகாரியங்களையும் அடுத்தடுத்து செய்யலாம். நல்ல நண்பர்களை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். நிறைய நல்லவை நடக்கும். அப்பா, அம்மாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நல்லது. உங்கள் கழுத்துப் பகுதியில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

    முன்னேற்றம்

    தொழில், வேலை, அந்தஸ்து, வியாபாரத்தில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் உண்டாகும். இந்த மாதம் கண்டிப்பாக நல்ல வாட்ச் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. விநாயகர் வழிபாடு, சங்கர நாராயணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

    English Summary

    In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Viruchigam rasi people during this week of August 10 to 16.