Rasi palan this week: செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பித்துள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும். இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 4 முதல் 10 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். விருச்சிகம் ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உறவினர்களிடம் வாக்குவாதம் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொற்றுநோய் தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அமைப்பு உள்ளது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். மதிப்பு, மரியாதை கூடும். எல்லா விதமான வசந்தங்களும் ஏற்படும். தொழிலில் இருந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். வெள்ளிக்கிழமையில் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பது நன்மையைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்த தடைகள் தீரும். அமோகமான வாரமாக இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்வது, தூரதேச பயணங்கள் மேற்கொள்வது போன்ற யோகம் ஏற்படும். வண்டி, வாகனங்களை மாற்றும் யோகம் உண்டாகும். மூட்டு அறுவை சிகிச்சை வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு செய்வீர்கள். இடத்தை விற்று, வீட்டை விற்பனை செய்து பெரிய பணங்கள் கைக்கு வரும் அமைப்பு உள்ளது. புதிய தொழில் ஆரம்பிக்கும் யோகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான அற்புதமான அமைப்பு உள்ளது. லாப ஸ்தானம் பலமாக இருக்கிறது. நண்பர்களை நம்பி எல்லா சில காரியங்களில் இறங்குவதைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் பிரச்சனைகள், மூத்தவர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சித்தப்பா, பெரியப்பாக்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. 4 ஆம் இடத்தில் ராகு அமர்ந்திருப்பதால் சுக ஸ்தானம் கெடுகிறது. இதனால், வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள், செலவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் சிறிய சிறிய பழுதுகள், பாதிப்புகள் வந்து கொண்டே இருக்கும். பாக்கியத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், குரு பெரிய அதிர்ஷ்டத்தையும், நம்பிக்கையையும், பொறுப்பையும் கொடுப்பார். மதுரை மீனாாட்சி அம்மனை மனதார வழிபாடு செய்வது ஏற்றத்தையும், சந்தோஷத்தையும் தரும். நினைத்த காரியங்கள் நடக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அப்பாவுடைய சொத்துகள், மூதாதையர் சொத்துகள் வந்து சேரக்கூடிய யோகம் ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பூர்வீக சொத்து, இடம், தோட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். நிறைய தான தர்மங்கள் செய்வீர்கள். சுபவிரயங்கள் ஏற்படும் காலகட்டம். பிள்ளைகளின் படிப்பு, தொழில், வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் நீங்கும். முருகர் வழிபாடு ஏற்றத்தை ஏற்படுத்தும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்மைகளைத் தரும்.விருச்சிகம் ராசி பலன்
சிக்கல் தீரும்
பண வரவு
தொழில் தொடங்கும் யோகம்
அதிர்ஷ்டம்
சுபவிரயம்
வழிபாடு