கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. கடக ராசிக்கு கை மேல் பணம்.. இந்த வாரம் வரும் குட்நியூஸ்

  • Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் கடகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கடகம் ராசி பலன்

    கடகம் ராசியினருக்கு வெற்றி மேல் வெற்றி ஏற்படும் காலகட்டம். வீடு கட்டும் யோகம் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரமான பொருள்களை வாங்கக்கூடிய நேரம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும் வாரமாக இந்த வாரம் அமையும்.

    Advertisement

    சொத்துகள் குவியும்

    விரயத்தில் செவ்வாய் இருப்பதால் கணவன், மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள், சச்சரவுகள் வந்து போகும். 4 ஆம் இடம் கேந்திரத்தில் சுக்கிரன் இருந்து பலம் பெற்று தனது வீட்டில் அமர்ந்திருக்கும்போது கண்டிப்பாக வீடு, சொத்துக்கள், வண்டி, வாகனம் அமையும். சொந்த பந்தங்கள் மூலாக நன்மதிப்பி கிடைக்கும். எந்தவொரு பிரச்சனையும், கெட்ட விஷயங்களும் நடக்காது. எல்லா விஷயங்களையும் சரியாக செய்து முடிப்பீர்கள்.

    ஆரோக்கியம்

    புதிய உத்தியோகம், வியாபாரம், நட்பு என எல்லாமே புதிதாக கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஏற்றங்கள் கொடுக்கக்கூடிய நேரமாக இருக்கும். ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்குள் வரும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மட்டும் வந்து போகும்.

    Advertisement

    யோக பலன்

    யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில அனுகூலம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். நவக்கிரகத்தில் இருக்கும் சனி பகவான் வழிபாடு நன்மை. கழுத்து, அலர்ஜி, தோல் சம்பந்தப்பட்ட விஷயத்திலும், வார்த்தைகளிலும் மிகுந்த கவனம் தேவை. சில குழப்பமான சூழ்நிலைகளை சிலர் ஏற்படுத்துவார்கள். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சியைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது.

    வழிபாடு

    வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தி ஏற்படும். உறவு முறையில் சிக்கல்கள் நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் ஏற்படும். நாராயணர் வழிபாடு, ,ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Kadagam Rasi Weekly Horoscope: Cancer natives may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.