Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கன்னி ராசியினருக்கு ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பரிபூரணமாக நீங்கும். வீட்டில் இருந்து வந்த சண்டைகள், பாதிப்புகள் நீங்கும். எலக்ட்ரிக், ஒயரிங் வேலைகளை செய்வீர்கள். வன்மத்தினால் குற்றங்கள் நடந்த நிலைமைகள் மாறும். குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் சேர்ந்திருப்பதால் குளிர்ச்சியான பொருள்களை தவிர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருவும், செவ்வாயும் மிகப்பெரிய ராஜயோகத்தைக் கொடுக்கும். பதவி, பட்டம், புகழ் என அற்புதமான வெற்றிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சொந்த வீடு வாங்கும் அமைப்பு. பெரிய பொறுப்புகளுக்கு வருவீர்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படும். வயிறு, குடல், முட்டி சார்ந்த பிரச்சனைகள் குறைந்து கொண்டே வரும் விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனத்தோடு இருப்பது நன்மை பயக்கும். வார்த்தைகளில் அதீத கவனம் தேவை. குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது. பல், கண் சார்ந்த பாதிப்புகளில் கவனம் தேவை. குடும்பத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளது. பண வரவு தாராளமாக இருக்கும். வராமல் இருந்த பணம், எப்போதோ வர வேண்டிய பண வரவுகள் எல்லாம் வந்து சேரும். காது, மூக்கு, தொண்டை, சைனஸ், சளி தொந்தரவுகளில் கவனத்தோடு இருக்க வேண்டும். உறவுகளுக்குள் கோபத்தைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நினைத்த காரியங்கள் எல்லாம் அடுத்தடுத்து நடக்கும். பண வரவுகள் நன்றாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மதிய வேளைகளில் உணவு தானமாக அளிப்பது சுப விரயங்களைத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்கள் ஜெயம் ஏற்படும். தெய்வ அனுக்கிரகம் ஏற்படும். பெருமாள் வழிபாடு ஏற்றத்தைத் தரும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு பெரிய ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் அற்புதமாக இருக்கும்.கன்னி ராசி பலன்
ராஜயோகம்
கவனம்
பணவரவு
ஆரோக்கியம்
வழிபாடு