Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் கன்னி ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும்.
சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) கன்னி ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கன்னி ராசியினருக்கு தனிப்பட்ட முறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். உறவுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். துணை விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். யோக பலன்களும், நன்மைகளும் உண்டாகும். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரண நிவர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். உறவுகளுக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் உள்ளதால் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. பண வரவு நன்றாக இருக்கும், லோன் கிடைக்கும். யாரிடம் பணம் கேட்டாலும் உடனே கிடைக்கும். நகைகள் வாங்கும் யோகம் உண்டு. வேலையில்ஆண்கள் உங்கள் பகைக்கும் சூழ்நிலை உள்ளதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உங்களுடைய திருப்தி, சந்தோஷம் ஏற்படும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். முகம் அழகு பெறும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். கோளார் பதிகத்தை கேட்பது கால சர்ப்ப தோஷத்தை நீங்கச் செய்யும். விரயங்கள் அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை மதிய வேளைகளில் அன்னதானம் அளிப்பது நன்மையைத் தரும். நவக்கிரக வழிபாடு, சாய்பாபா, மகரிஷி, ராகவேந்திரர் போன்ற மகான்கள் வழிபாடு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அடுத்த ஒரு மாதத்தில் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும். ஆரோக்கியத்தில் எலும்பு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. அருமையான காலகட்டமாக இருக்கும். அரங்கநாதர் வழிபாடு, ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.கன்னி ராசி பலன்
யோக பலன்கள்
பணவரவு
வெற்றி
வழிபாடு