Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். கும்பம் ராசியினர் இந்த ஆண்டாடோடு உங்களுக்கான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். 21 ஆம் தேதி முதல் நிறைய மாற்றங்கள் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். நிறைய பேருக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். பெரிய பெரிய வெற்றியைக் கொண்டாடக்கூடிய யோகம் ஏற்படும். எந்த விஷயத்தை குறிவைத்தாலும் அவை உங்களை கைவிட்டுப் போகாது. மற்றவர்கள் செய்த தவறு கூட உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. தைரியமாக இருக்கக்கூடிய காலகட்டம். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் வக்கிரமாகவும், புதனும் சேர்ந்திருக்கிறது. நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாக பெரிய நல்ல காரியம் நடக்கும். வேறு ஊருக்குச் செல்லக்கூடிய அமைப்பு உள்ளது. குஜராத், செளராஷ்டிரா செல்லும் அமைப்பு உள்ளது. முக்கியமான வேலைகளுக்காக அங்கு சென்று வருவீர்கள். பெற்றோர், பெரியோர் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திடீர் பண வரவு யோகத்தைக் கொடுக்கும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். கணவர் மனைவியின் உடல்நிலையையும், மனைவி கணவரின் உடல்நிலையையும் மிகுந்த கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சார்ந்த விஷயங்களில் சில தவறான வழிகாட்டுதல்கள் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பசு மாடுகளுக்கு வெள்ளிக்கிழமை தோறும் உணவு தானமாகக் கொடுப்பது தடைகளை தவிடு பொடியாக்கும். சோம்பல்கள் குறையும் அமைப்பு ஏற்படும். பெற்றோர், துணையின் ஆரோக்கியத்தை கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம். கடல் கடந்து பயணங்களை மேற்கொள்வது சந்தோஷத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். இயற்கையாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பெரும் செல்வாக்கு ஏற்படும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். 23 முதல் 25 ஆம் தேதி வரை குழப்பமான மனநிலை இருக்கும் என்பதால் கவனம் தேவை. நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம நன்றாக நடக்கும். கால் வழுக்கி விழுவது, தண்ணீரில் இறங்கும்போது அடிபடுவது போன்றவற்றில் கவனம் தேவை. அகோர வீரபத்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுப்பார். அகோர வீரபத்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும்.கும்பம் ராசி பலன்
புதிய வேலை
அனுகூலம்
திடீர் பணவரவு
தடைகள் நீங்கும்
சிக்கல் தீரும்
வழிபாடு