கும்ப ராசிக்கு இனி அதிர்ஷ்டம் உச்சம்.. சொத்து, கார், வெளிநாட்டு பயணம் யோகம்

  • Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் கும்ப ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும்.

    Advertisement

    சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமருவதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) கும்ப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    கும்ப ராசி பலன்

    கும்ப ராசியினர் வெளியூர் பயணம் மேக்கொள்வீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெளிநாடு, வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். கார் வாங்கும் யோகம் உண்டு. டிரான்ஸ்போர்ட், டிராவல்ஸ் வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும். வீடு கட்டுவது, சொத்துகள் வாங்குவது, பூர்வீக சொத்துகள் கைக்கு வருவது போன்ற யோகம் உண்டாகும்.

    Advertisement

    நன்மைகள்

    டென்ஷன், பயம் அனைத்தும் நீங்கும். ஆரோக்கிய குறைபாடு, குடும்பப் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும். பெரிய கல்லூரிகளில் சீட் கிடைக்கும். நினைத்தவற்றை சாதிக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உள்ளது. அதீதமாக சிந்தித்துக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது பெரிய நன்மையையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும்.

    சுபவிரயம்

    துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அஜீரண கோளாறு தொடர்பான பாதிப்பில் கவனம் தேவை. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான மாற்றங்கள் நம்பிக்கையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். சுபவிரய பாக்கியம் உண்டாகும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும காப்பாற்றுவீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும்.

    Advertisement

    வெற்றி மேல் வெற்றி

    புதிதாக தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். 70 வயது வரை உள்ள கும்ப ராசியினருக்கு எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கும். படிக்கட்டுகள், எதிரிகள், நட்பு என்ற பெரில் தீங்கு விளைவிக்கும் நபர்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும்.

    வழிபாடு

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் அற்புதமாக இருக்கும்.

    English Summary

    Aquarius natives may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.