மிதுன ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் மெகா அதிர்ஷ்டம்.. புரமோஷன் கன்ஃபார்ம்

  • Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    மிதுனம் ராசி பலன்

    மிதுன ராசியினருக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பழைய கடன்கள், கொடுக்கல் வாங்கலில் சிறிய பிரச்சனைகள் கூட பெரிய மன வருத்தங்களை ஏற்படுத்தக் கூடிய காலகட்டம் என்பதால் கவனம் தேவை. உறவுக்காரர்கள் விஷயத்தில் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் பெரும் பிரச்சனைகள் தீரக்கூடிய வாரமாக இருக்கும். நல்ல மருத்துவர்கள், மருந்துகள் கிடைக்கும்.

    தடைகள் நீங்கும்

    பூர்வீகத்தில் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் ஏற்றங்கள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றுவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் தடையாய் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். வயிற்று உபத்திரவம், அசிடிட்டி பிரச்சனை, அலர்ஜி பிரச்சனையை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    புரோமோஷன்

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் நல்ல அமைப்பு. அற்புதமான வாரமாக இருக்கும். பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிர பகவான் வக்கிரமாக இருக்கிறார். ராசியதிபதி பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சூரியனோடு சேர்ந்திருப்பது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். சூரியன் நீச்சம் என்பதால் பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். ஒரு சிலர் படிப்பு, ஹாஸ்டலுக்கு வெளியில் செல்வார்கள்.

    குழந்தை பாக்கியம்

    குழந்தை பாக்கியம் கிடைக்கும். படிப்பு, அறிவுக் கூர்மை, புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பஞ்சம ஸ்தானத்தில் ஏராளமான கிரகங்கள் அமர்ந்திருப்பது அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. சளி பிடிப்படிதற்கான வாய்ப்புள்ளது. தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.

    Advertisement

    வழிபாடு

    வேலையில் பிரச்சனைகள் தீர்ந்து அடிக்கடி நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொட்டது துலங்கும் காலகட்டம். ஆரோக்கியத்தில் முதுகுவலி போன்ற பிரச்சனைகள் வாய்ப்புள்ளது. உடம்பில் சூடு அதிகமாக இருக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை மனதார வழிபாடு செய்வது சகலவித முன்னேற்றங்களையும் அள்ளித் தரும்.

    English Summary

    Rasi Palan This Week: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Mithunam (Gemini) sign during the period from October 19 to 25.