“நினைத்தது நடக்கும்”.. மிதுனம் ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட்.. பணவரவு எப்படி?

  • Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் மிதுனம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    மிதுனம் ராசி பலன்

    மிதுனம் ராசியினருக்கு உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். தொழில் ரீதியாக அனுகூலமும், சந்தோஷமும் ஏற்படும். நட்புகள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். மன அழுத்தங்கள் தீரும்.

    Advertisement

    அனுகூலம்

    தொலைதூரத்தில் இருந்து உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு தொடர்பான அனுகூலங்கள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே தவிர்ப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் உணவு தானம் கொடுப்பது பிள்ளைகள் விஷயத்தில் வரும் அநாவசிய விரயங்களைத் தடுக்கும். லலிதா சஹஸ்ஹர நாமத்தைக் கேட்பது பெரிய அளவுக்கு குடும்பத்தில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும்.

    சொந்த வீடு

    வீடு வாங்கக்கூடிய யோகம், கணவன் மனைவிக்கு வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல காதல் அமையும். வீடு, வண்டி, வாகனங்கள் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பெருமைக்குரிய விஷயங்கள் ஏற்படும். கான்டிராக்டுகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பேருக்கு இடமாற்றங்கள் உண்டாகும். பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வரன்கள் அமையும்.

    Advertisement

    எதிர்பார்க்காத யோகம்

    வேலை, உத்தியோகம், வியாபாரம், தொழில் நிமித்தமாக மகன் பிரியும் நிலை ஏற்படும். இந்த வாரத்தின் இரண்டாம் பகுதி அற்புதமாக இருக்கும். பணவரவு அபரிமிதமானதாக இருக்கும். பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். நினைத்த எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். எந்தவிதமான மாற்றங்கள் வந்தாலும் அதனை எடுத்துக் கொள்வது நல்லது. பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும்.

    வழிபாடு

    தொழிலில் நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொண்டை வலி, அஜீரணக் கோளாறுகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு நன்மைகளை ஏற்படுத்தும். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு சகலவித முன்னேற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.

    English Summary

    Mithunam Rasi Weekly Horoscope: Gemini natives may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.