Rasi palan this week: அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 2 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். ரிஷபம் ராசியினருக்கு அரசுத் துறை, உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு போன்ற விஷயத்தில் அற்புதமான ஏற்றங்களும், சந்தோஷமும் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். நிறைய விஷயங்கள் உங்களுக்கு சந்தோஷத்தையும், வெற்றியையும் ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான அமைப்பு உள்ளது. தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். குடும்பத்தில் அந்நியர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. துணை விஷயத்தில் வாக்குவாதங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் இருந்து வந்த சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் துணையின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள். தாய் வழி உறவுகளில் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். ரத்த பந்த உறவுகள் விஷயத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. முக்கியமான காலகட்டமாக இந்த வாரம் இருக்கும். எடுத்த காரியங்களில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். 6 ஆம் இடத்தில் ஏராளமான கிரகங்கள் இருப்பது ருண, ரோகம், சத்ரு ஸ்தானமாக இருக்கும். அது சுக்கிரனுடைய வீடு. அதில், 3 கிரகங்கள் இருப்பது அபாரமான மாற்றத்தை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எல்லா காரியங்களும் கைகூடும். மன நிம்மதி ஏற்படும். பிடிவாதம் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு இரண்டு வேலை கிடைக்கும். புதிய இடம், புதிய கடன், புதிய வாகனம் அமையும் அமைப்பு உள்ளது. மாணவ, மாணவிகளுக்கு நல்ல சிந்தனைகள் இருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதில் சிரமம் இருக்கும். அதிகாலையில் படிப்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். விற்க முடியாமல் இருந்த நிலைகளை விற்று முடிப்பீர்கள். மெடிஷன் படிப்பது, காது மூக்கு தொண்டை, தைராய்டு சம்பந்தப்பட்ட படிக்கும் அமைப்பு உள்ளது. ஆர்கிடெக்சர் படிப்பு ஆரோக்கியத்தில் கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். வாரத்தின் இறுதிப் பகுதியில் முடிவெடுப்பகுதியில் கவனம் தேவை. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் அற்புதமாக இருக்கும்.ரிஷபம் ராசி பலன்
கவனம்
சங்கடங்கள் நீங்கும்
முன்னேற்றம்
வேலை வாய்ப்பு
80 மார்க்