Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் துலாம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும்.
சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமருவதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) துலாம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். துலாம் ராசியினருக்கு உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பு ரீதியாக இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் உண்டாகும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. உறவுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இழுபறியாக இருந்த விஷயங்கள், தடைகள் எல்லாம் நீங்கி முன்னேற்றம் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். உத்தியோகம் ரீதியாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். தனிப்பட்ட முறையில் யோக பலன்களைப் பெறுவீர்கள். நிலம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். அடுத்தடுத்து சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் யோக பலன்கள் அதிகளவில் நடக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். சொத்துகளை குவிக்கும் யோகம். புதிய வண்டி வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். நிறைய நல்ல காரியங்கள் நடக்கும் அற்புதமான நேரம். எந்த விஷயத்துக்கும் பயப்படக் கூடிய தேவை இருக்காது. 3, 4, 5, 6 ஆம் தேதிகளில் பெரிய பணம், சந்தோஷமும் வந்து சேரும். முக்கியமான முடிவுகளில் பிரம்மாண்டமான வெற்றியைப் பெறுவீர்கள். மூதாதையர்கள் சொத்துகள் வந்து சேரும். எல்லா விஷயத்திலும் பெரிய முன்னேற்றம் ஏற்படும். தடைகளைத் தகர்த்தெறியக் கூடிய யோகம். அலர்ஜி, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 90 சதவீதம் நன்றாக இருக்கும். ருத்ரன் வழிபாடு ஏற்றததைக் கொடுக்கும். புதன்கிழமை தோறும் மதிய வேளைகளில் அன்னதானம் அளிப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். முருகர் வழிபாடு யோக பலத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.துலாம் ராசி பலன்
தடைகள் நீங்கும்
சொத்து வாங்கும் யோகம்
பணவரவு
முன்னேற்றம்