திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் குரு, செவ்வாய்.. விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் மெகா ஆஃபர்

  • Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் விருச்சிகம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.

    அதன்படி, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    Advertisement

    விருச்சிகம் ராசி பலன்

    விருச்சிகம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மேலதிகாரிகள், உடன் வேலை செய்பவர்கள் விஷயத்தில் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். ஆதித்ய ஹிருதயம் கேட்பது, அனுமன் சாலிஷா கேட்பது அனுகூலத்தைத் தரும்.

    பொறுமை அவசியம்

    உறவுகளுக்குள் கோபம், சண்டை போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். முதுகுத் தண்டுவடம், தோள்பட்டை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் பொறுமையாச் செல்வது நல்லது. பிள்ளைகள் திடீரென வெளியில் இருக்கும் கோபத்தை உங்கள் மீது காட்டக்கூடிய வாய்ப்புள்ளது. அவர்களை அரவணைத்துச் செல்வது நன்மை பயக்கும்.

    Advertisement

    செவ்வாய், குரு அருள்

    அற்புதமான வாரமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாயும், குருவும் இணைந்திருப்பது அற்புதமான யோகத்தைத் தரும். சனி வக்கிரமாக இருக்கிறது. பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இடமாற்றம், காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பொறுப்புகள் மாறும். புதிய இடங்கள் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய நபர்கள் வருவார்கள். எல்லா விஷயத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள்.

    செலவுகள் கூடும்

    நம்பிக்கைக்கு உரியவராக மாறுவீர்கள். விரயத்தில் இருக்கும் சூரியன், சுக்கிர பகவான் நிறைய செலவுகளைக் கொடுப்பார். பயணங்களுக்காக, மனைவிக்காக, ஆடம்பரப் பொருள்களுக்காக, மாத்திரை, மருந்துகளுக்காக செலவு செய்வீர்கள். வெளியூர் சென்று புதிய பொருள்களை வாங்குவது, நிலத்தில் முதலீடு செய்வது போன்ற அமைப்பு உள்ளது.

    Advertisement

    வெளிநாடு பயணம்

    இருக்கின்ற சில விஷயங்களை மாற்றும் அமைப்பு உள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாயும், குருவும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். அயல்நாட்டு பயணம், வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் அமைப்பு உள்ளது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

    வழிபாடு

    மாணவ, மாணவிகளுக்கு நல்ல கல்விக்கான சீட் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பல்கலைக்கழகங்கள், பெரிய கல்லூரிகளில் சேரும் அமைப்பு உள்ளது. படிப்பில் மாற்றம் ஏற்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீத நன்மைகளைத் தரும்.

    English Summary

    Weekly rasi palan: In this feature, we look at the lucky outcomes, remedial measures, deities to worship, and areas requiring caution for the Viruchigam (Scorpio) sign during the period from October 19 to 25.