குரு கொடுக்கும் ராஜயோகம்.. விருச்சிக ராசிக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றி.. அதிர்ஷ்டம் உச்சம்

  • Rasi palan this week: ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான (ஆவணி 14 முதல் 20) காலகட்டத்தில் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும்.

    Advertisement

    சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமருவதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் (ஆவணி 14 முதல் 20 ஆம் தேதி வரை) விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    விருச்சிக ராசி பலன்

    விருச்சிக ராசியினருக்கு உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். மகாவிஷ்ணு வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு ஏற்றத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. படபடப்பு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    சங்கடங்கள் தீரும்

    கும்பத்தில் குரு இருப்பதால் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். நிறைய நன்மைகள் நடக்கும். ஆன்மீக தரிசனங்கள் மேற்கொள்வீர்கள். எல்லா நல்ல காரியங்களும் அணிவகுத்து வரும். தேவையில்லாமல் மனதை கஷ்டப்படுத்திக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் எல்லா விதமான சங்கடங்களும் நிவர்த்தியாகும். இழுபறியான சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.

    முன்னேற்றம்

    சமூகத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு அனுகூலத்தை ஏற்படுத்தும். பயணங்களில் புதிய மனிதர்களின் அறிமுகத்தில் கவனம் தேவை. உறவினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெற்றோர் பெரியோருடன் இணக்கமாகப் பேசுவது நன்மையைத் தரும். தொழில் மாற்றங்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இடமாற்றம், வேலை மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். சுற்றுலா செல்வது என மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

    Advertisement

    பாக்கியத்தில் குரு

    நிறைய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். புதிய முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். மன சங்கடங்கள் நிவர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை, முதலீடுகளை செய்வீர்கள். வளர்ச்சிக்குரிய விஷயங்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வெற்றியைக் குறிக்கக்கூடிய ஸ்தானம் அமையும். பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் நிறைய நன்மைகள் நடக்கும்.

    வழிபாடு

    அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நிறைய பேருக்கு வேலை மாற்றம் உண்டாகும். அரசாங்க உத்தியோகம் கிடைப்பது, இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிய வேலை கிடைக்கும். விரயத்தில் சுக்கிரன் இருப்பதால் ஆரோக்கியத்தில் செலவுகள் வந்து போகும். அலைச்சல் ஏற்படும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்மை கிடைக்கும். நாராயணர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.

    English Summary

    Viruchigam rasi may see important developments in career, finances, family life and relationships this week, with opportunities for progress and success.