Weekly Rasi Palan: ஆகஸ்ட் 25 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 8 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் முதல் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.
சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 30 ஆம் தேதி (ஆவணி 8 முதல் 13 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் துலாம் முதல் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம். துலாம் ராசியினருக்கு மிக முக்கியமான காலகட்டம். விரயத்தில் சுக்கிரன் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தேவையில்லாத விரயங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெண்களுடைய ஆரோக்கியம், தவறான சகவாசங்களால் பிரச்சனைகள் வரலாம். ஒரு சிலருக்கு சர்க்கரை அதிகரிப்பது, கிட்னி செயல்பாடுகளில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. லாபத்தில் அமர்ந்திருக்கும் சூரியன், புதன், கேதுவால் பெரிய அரசியல்வாதிகள் அல்லது பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாவதற்கான வாய்ப்பு ஏற்படும். அரசுத் துறையில் இருக்கும் நபர்கள் உங்கள் சாதகமாக நடப்பதற்கான வாய்ப்புள்ளது. 10 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கும் குரு உங்களுக்கு நிறைய நன்மைகளை செய்வார். நல்ல விஷயங்கள் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் கோபம் கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். அலர்ஜி, மன வருத்தம் சம்பந்தப்பட்ட வியஷயங்களில் இருந்து வெளியில் வருவீர்கள். விருச்சிகம் ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். எதிர்பார்க்காத பண வரவு உண்டாகும். விருச்சிக ராசியினர் உள்ள வீட்டில் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். சுப காரியங்களில் அதீதமான ஏற்றம் உண்டாகும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு அதிகரிக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். புதிய முயற்சிகள் மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் ஏற்படுத்தும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட வருத்தங்களை தவிர்த்துக் கொள்வது நன்மையைத் தரும். தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உறவுகளுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும். இடமாற்றம், மன மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். புதிய தொழில் ஆரம்பிக்கக்கூடிய அமைப்பு உள்ளது. முன்னோர்களின் சொத்துகள் வந்து சேரும். வெளியூரில் குடியுரிமை வாங்கும் யோகம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். தனுசு ராசியினருக்கு பாக்கியத்தில் சூரியன், புதன், கேது அமர்ந்திருப்பது பெரிய வெற்றியைக் கொடுக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாம் தீரும். நல்ல வேலை கிடைப்பது, பெரிய நிறுவனத்தில் அமருவது, கஷ்ட காலம் தீருவது என அமோகமான காலகட்டமாக இருக்கும். தொழில் ஸ்தானம் 10 ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் அற்புதமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மெடிஷன், பேன்சி ஐட்டம், மேக்கப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பெண்கள் சார்ந்த துறைகளில் நிச்சயமாக வேலைவாய்ப்பு அமையும். 7 ஆம் இடத்தில் செவ்வாய் பலமாக அமர்ந்திருப்பதால் வீடு, சொத்து அமையும் யோகம் உண்டாகும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். 4 ஆம் இடத்தில் சனி வக்கிரமாக இருப்பதால் தாயாரின் ஆரோக்கியம், ரத்த அழுத்தம் போன்ற விஷயங்களில் எச்சரிக்கை தேவை. துணைக்கு நல்லது நடக்கும் காலகட்டம். பெற்றோர், பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவது, உறவுக்காரர்களுடன் உள்ளூர், வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். மன அழுத்தம் பரிபூரணமாக நீங்கும். தனிப்பட்ட செல்வாக்கு கூடும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். வெள்ளிக்கிழமை தோறும் சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அம்பாள் வழிபாடு அனுகூலத்தை தரும். மகரம் ராசியினருக்கு இழுபறியாக இருந்து வந்த கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதீதமான ஏற்றமும், நன்மைகளும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். முழு முதலீடுகளுக்கு உத்தரவாதம் ஏற்படும். பிரகாசமாக மாறுவீர்கள். நிறைய சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை ஏற்படும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் தோல், கழுத்து, பின்பகுதிகளில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. முயற்சிகள் சாதகமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பதால் நல்ல முன்னேற்றம் காணப்படும். எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். புதிய முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனம், பணம் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். கும்பம் ராசியினருக்கு துணை விஷயத்தில் கோபம் கொள்ளாமல் இருப்பது நன்மையைத் தரும். குடும்பத்தில் தேவையில்லாத விஷயங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. வெளியிடம், உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் 70 வயதுக்குள் இருக்கும் கும்ப ராசியினருக்கு படிப்படியாக நன்மைகள் ஏற்படும். இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் சந்திரன் ராகு சேர்வதால் தேவையில்லா மனக் குழப்பம், மன அழுத்தம், மற்றவர்களை அச்சுறுத்தலாகப் பேசுவது போன்ற அமைப்பு ஏற்படும். நல்லதாகவே இருந்தாலும் தப்பாக தோன்றும் மன நிலை உள்ளது. ஆனால், டிசம்பர் மாதம் முதல் உங்களுக்கு அற்புதமான முன்னேற்றமும், மகிழ்ச்சியும் உண்டாகும். பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் அரசியல்வாதிகளுக்கு பெரிய வெற்றி ஏற்படும். நிறைய நிலம், இடம் வாங்கும் அமைப்பு உள்ளது. பிரச்சனைகள், பஞ்சாயத்துகள் நீங்கும். சட்ட சிக்கல்களை அமர்ந்து பேசி முடிந்து கொள்வது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். சந்திர மெளலீஸ்வரர் வழிபாடு சகலவித முன்னேற்றத்தைக் கொடுக்கும். மீனம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் யோகம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். கடன் அடையும் யோகம் உண்டாகும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். தெய்வ காரியங்களுக்குச் சென்று வருவீர்கள். பெரிய ஆற்றலுக்குரிய அமைப்பு உள்ளது. நீண்ட காலமாக செய்ய வேண்டும் என்று நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வீடு கட்டுவது, பிளாட் கட்டுவது போன்ற அமைப்பு உள்ளது. வயிறு எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும். தொழில், உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்து முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு கிடைப்பதுடன், பொருளாதார நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளை தைரியமாக தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.துலாம் ராசி பலன்
விருச்சிகம் ராசி பலன்
தனுசு ராசி பலன்
மகரம் ராசி பலன்
கும்பம் ராசி பலன்
மீனம் ராசி பலன்