ஜூன் மாத பலன்கள்: 2026 ஜூன் மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தொழில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், திருமண யோகம், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் அளிக்கும்.
இந்த மாதத்தின் மிக முக்கியமான நிகழ்வாக குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல ராசியினரின் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் உருவாகும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் செயல் வேகம் மற்றும் தைரியத்தை அதிகரிக்கச் செய்கிறார். 2026 ஜூன் மாதம் பல புதிய வாய்ப்புகளையும் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரக்கூடிய மாதமாக அமைகிறது. தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண யோகம் போன்ற விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்படலாம். அதே நேரத்தில் சில விஷயங்களில் பொறுமையும் நிதானமும் அவசியமாக இருக்கும். இந்த மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய அம்சங்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். ரிஷபம் ராசியினருக்கு மாததத்தின் 20 நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் இடமான தன ஸ்தானத்தில் இருக்கும். அங்கு அவர் புதனுடன் வலிமையாக உள்ளார். குரு பெயர்ச்சியில் குரு பகவான் மூன்றாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ந்திருப்பது நல்ல யோகம். சூரியன் நான்காம் இடமான ராசியாதிபதி இடத்தில் இருப்பதும், 11வது இடத்தில் சனி பகவான் இருப்பதும் கொடுத்த வைத்த அமைப்பாகும். ரிஷப ராசிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் சமாளிக்க முடியும். மாதத்தின் 15 தேதிக்கு பிறகு உச்ச குருவாக மாறுவதால் பெயர், புகழ் அதிகரிக்கும். 3வது இடத்தில் குரு இருப்பதால் இசை, கலை, சினிமா, ஊடகம் துறை சார்ந்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடல் கடந்து யோகம் உண்டாகும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். சனியை உச்ச குரு பார்ப்பதால் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். போட்டி தேர்வில் வெற்றி உண்டாகும். அரசுப்பணிகள் கிடைக்கும். பணிக்கான நேர்காணலில் வெறறி வரும். பணவரவு திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். கடன் சுமை குறையும்.ரிஷபம்
சனியை பார்க்கும் குரு
பண வரவு
காதலில் வெற்றி கிடைக்காதவர்களுக்கு இப்போது காதல் கைக்கூடும். காதல் உறவு திருமணத்தில் முடியும். வண்டி, வாகனத்தில் யோகம் உண்டு. புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பெற்றோருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.