சனியின் அருளால் ரிஷப ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. இந்த 1 விஷயத்தை மறந்தும் செய்திடாதீங்க

  • Weekly Rasi Palan: ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் சிம்ம ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆவணி மாதமாகும். சூரியன் தனது சொந்த ராசியில் வந்து அமர்வதால் மிகவும் வலுவாக காணப்படுவார். ரத்த அழுத்தம், வெர்டிகோ உள்ளவர்கள் இந்த மாதத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில், ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி (ஆவணி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு சொந்த ஊர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்கம், அரசு, வங்கியில் பணிபுரிவோருக்கு வேலைகள் போவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. தேவையில்லாத சர்ச்சைகளில், வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

    Advertisement

    கவனம்

    3 ஆம் இடம் நன்றாக இருப்பதால் இடமாற்றங்கள் ஏற்படும். அண்ணன், தம்பி சம்பந்தப்பட்ட விஷயங்களில், பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பஞ்சம ஸ்தானம் வலுவிலந்து இருப்பதால் மழையில் நனைவதை தருப்பது நல்லது. குளிர்ந்த பொருட்கள், இனிப்புகள் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பெரிய மாற்றங்கள் கண்டிப்பாக உண்டாகும்.

    லாபத்தில் சனி

    பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சனைகள், சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்கள் திட்டமிடல்கள் சிறிது தள்ளிப் போய் நடப்பதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எலக்ட்ரிசிட்டி தொடர்பான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். லாப ஸ்தானத்தில் சனி வக்கிரமாக இருப்பது ஏற்றத்தைக் கொடுக்கும்.

    Advertisement

    வழிபாடு

    உறவுகளிடம் தகராறு, வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய சுப காரியங்கள் நடக்கும். துணையின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். எதிர்பார்க்காத நன்மைகள் உண்டாகும். விஷ்ணு வழிபாடு பல விதத்தில் நன்மையை ஏற்படுத்தும். விஷ்ணு சஹஸ்ஹர நாமம், விஷ்ணு காயத்ரி மாற்றத்தை ஏற்படுத்தும்.

    அனுகூலம்

    அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண விரயத்தில் இருந்து அனுகூலம் ஏற்படும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளியிடத்திலும் காப்பாற்றுவீர்கள். துணையுடன் நீண்ட நாட்களாக இருந்து வந்த மன கஷ்டம், பண கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும்.

    Advertisement

    உங்களுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 80 சதவீதம் நன்றாக இருக்கும். ஒற்றை தலைவலி, கழுத்துக்கு கீழ், நெஞ்சில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    English Summary

    Rasi Palan This Week: In this astrological article, let us look in detail at the favorable outcomes, remedial measures, and deities to be worshipped for the Rishabam rasi people during this week of August 17 to 23.