ஜூலை 13 - 19 வார பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளும் ரிஷப ராசி.. இந்த விஷயங்களில் மட்டும் எச்சரிக்கை

  • Weekly Rasi Palan: ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

    Advertisement

    சூரிய பகவான் கடக ராசிக்கு வரக்கூடிய மாதமே ஆடி மாதமாகும். ஜூலை 27 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அம்மனுக்கு உகந்த மாதமான இந்த ஆடி மாதத்தில் பல்வேறு முக்கய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், ஜூலை 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி (ஆனி 29 முதல் ஆடி 3 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசியினருக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். வண்டி வாகனங்களில் விபத்தில் சிக்குவது, தலையில் அடிபடுவது போன்றவற்றுக்கு வாய்ப்புள்ளது. வீடு, நிலம் வாங்குவது போன்ற எண்ணம் தோன்றும். நிறைய குழப்பமான மன நிலைகளில் இருப்பார்கள். வன்மத்தினால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. முதல் 2 நாட்களுக்கு மட்டும் கடினமான மன நிலை இருக்கும்.

    Advertisement

    நல்ல செய்தி

    துணையின் மீது அதீதமான கோபம் வருவதற்கான வாய்ப்புள்ளதால் அதனை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. கடைவாய் பல்லில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. புதன் வக்கிர நிலையில் இருப்பதால் பணத்தை சரியாக வசூல் செய்து கொள்வது நல்லது. பணப் பரிவர்த்தனையில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. நல்ல செய்திகள், தகவல்கள் உங்களை வந்து சேரக்கூடிய அமைப்புள்ளது.

    முன்னேற்றம்

    வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. லட்சுமி ஸ்தோத்திரம் கேட்பது நன்மையைத் தரும். எல்லா விஷயங்களிலும் வெற்றிகள் உண்டாகும். குடும்பம், உறவினர்கள் விஷயத்தில் வெற்றி ஏற்படும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். வண்டி, வாகனத்தில் மாற்றங்கள் உண்டாகும். வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், தொழில் நிமித்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    Advertisement

    பதவி உயர்வு

    சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அனுகூலமான காலகட்டாக இருக்கும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த நிறைய விஷயங்களை முடிப்பீர்கள். நிறைய நன்மைகள் நடக்கும் மாதமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.

    வழிபாடு

    நெஞ்சுசளி பாதிப்பு, அம்மாவின் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வீட்டில் சிறு சிறு பழுதுகள் வருவது போன்றவற்றுக்கான வாய்ப்புள்ளது. திருத்தணி முருகனை மனதார வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 70 சதவீதமும் நன்மையை ஏற்படுத்தும். உங்களுடைய ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

    English Summary

    Weekly Rasi Palan for Rishabam (ரிஷபம் ராசி பலன்): Let us look at the favorable outcomes in store for those born under the Rishabam sign during this week, from July 13 to 19.