ரிஷப ராசிக்கு தங்க நகைகளை வாங்கி குவிக்கும் யோகம்.. இந்த வாரம் வரும் அற்புதம்


  • Rishabam Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்களை விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும், என்ன மாதிரியான நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றன, எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பதையும் இந்த ஜோதிட பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    2026 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது வழக்கம். இந்த கிரக நிலை மாற்றங்கள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்களையும், சிலருக்கு சவால்களையும் தரக்கூடும்.

    Advertisement

    வைகாசி மாதம் மிகவும் சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. முருகப்பெருமான் அவதரித்த மாதமாக இருப்பதால் இந்த மாதத்திற்கு ஆன்மீக முக்கியத்துவம் அதிகம். இந்த மாத ஆரம்பத்தில் சந்திரன் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். 12ஆம் இடத்தில் சனி தனது இருப்பை நிலைநிறுத்தியுள்ளார். செவ்வாய் மேஷ ராசியில் ஆட்சியில் இருக்கிறார். சுக்கிரன் மீன ராசியில் இருக்கிறார். சூரியன் ரிஷப ராசியில் இருந்து தனது சஞ்சாரத்தை தொடங்கியிருப்பதே இந்த வைகாசி மாதத்தின் சிறப்பாகும்.

    அந்த வகையில், மே 25 முதல் மே 31 வரை ரிஷப ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் பரிகாரங்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.

    Advertisement

    ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)

    ரிஷப ராசியினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் தீரும் அற்புதமான காலகட்டம். சமுதாயத்தில் உங்கலுடைய செல்வாக்குகள் கூடும். மேலதிகாரிகளிடம் கோபப்படுவது, வாக்குவாதம் செய்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்புகள் இல்லாமல் இருப்பது நன்மை பயக்கும். தொழிலில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் தீரும்.

    யோகம் கொட்டும்

    யோக பலன்கள் அதிகளவில் பெறும் காலகட்டம். உறவு முறையில் யார் என்ன பேசினாலும் அதற்கு மகிழ்ச்சியாக பதில் சொல்வது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். இதுவரை நீங்கள் திட்டமிட்டிருந்த அனைத்து விஷயங்களிலும் தோல்வி அடைந்திருப்பீர்கள். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறி முன்னேற்றம் ஏற்படும். நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் காலகட்டமாக இரக்கம்.

    Advertisement

    தங்கம் வாங்கும் யோகம்

    தங்கம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். புதிய மொபைல் வாங்கும் வாய்ப்புள்ளது. ஒரு வாரத்திற்கு ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திப்பதால் கிருத்திகை கொஞ்சம் நன்றாக இருக்கும். ரோகிணி, மிருகசீரிஷம் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பெரியவர்களுடன் சண்டை, பிரச்சனைகள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    வழிபாடு

    பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேவையான பண வரவு உண்டாகும். பேச்சு அற்புதமாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கும் காலகட்டம். மற்றவர்களை நம்பி பணம் கொடுக்காமல் இருப்பது நல்லது. எல்லா விஷயங்களையம் தைரியமாக சமாளிக்கும் காலகட்டமாக இருக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு, அனுமன் வழிபாடு ஏற்றத்தைத் தரும். ராசியான நிறம் வெள்ளை.

    English Summary

    Rishabam Rasi Palan: Let us take a detailed look at the weekly predictions and remedial measures for the Taurus zodiac sign from May 25th to May 31st (Vaikasi 11th to 18th). This astrological overview explains how the week is likely to unfold, the benefits you may receive, and the deities you should worship for better results.