Rishabam: ரிஷப ராசியினரே ஆகஸ்ட் 18 வரை ரொம்ப கவனம்.. கணவரிடம் கப் சிப் நல்லது

  • ஆகஸ்ட் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ளது. இந்த மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

    Advertisement

    ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று ஆடிகிருத்திகை முருகனுக்கு உகந்த நாள். இந்த நாளில் விரதம் இருப்பது திருமணப் பிரச்சனைகள், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆடி அமாவாசை வருகிறது. பித்ருக்களான தர்ப்பணங்களை இந்த நாளில் செய்வது நன்மையைத் தரும். ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு மேல் ஆவணி மாதம் பிறக்கவுள்ளது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பொங்கல் வைப்பது நன்மை பயக்கும். ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆவணி அவிட்டம் வருகிறது. இந்த நாளில் கல்வியைத் தொடங்குவது ஏற்றத்தைத் தரும்.

    Advertisement

    பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் வலுவிலந்து காணப்படுவதால் வண்டி, வாகனங்களில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனையாக இருப்பது நல்லது. குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள் கவனமாக இருப்பது நல்லது. அந்த வகையில், ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் எப்படி அமையும் என்று பார்க்கலாம்.

    ரிஷபம் ராசி பலன்

    ரிஷப ராசி பெண்கள் நிறைய விஷயங்களை குடும்பத்திற்காகப் பார்த்து பார்த்து செய்வீர்கள். அழகுணர்ச்சி அதிகமாக இருக்கும். வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழும் உங்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் ராசிநாதன் சுக்கிரன் நீசமாக, சனியின் பார்வையில் இருக்கிறார். மாதத்தின் ஆரம்பமே தாழ்வு மனப்பான்மையுடனும், சோர்வாகவும் ஆரம்பமாகி இருக்கும். 18 ஆம் தேதி வரை மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

    Advertisement

    குழந்தைகள்

    ஒருவிதமான சோம்பல், தூக்கம் இருந்து கொண்டே இருக்கும். குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பிள்ளைகளைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய விஷயத்தில் எந்தவித குறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் முன்பு சண்டை போடுவதை தவிர்ப்பது நல்லது. குழந்தை பாக்கியத்திற்கு இந்த மாதம் சாதகமாக இல்லை.

    கவனம்

    5 இல் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், சனி பார்வை இருப்பதால் வீட்டில் இருப்பவர்களால் மட்டுமல்லாமல், பக்கத்து வீட்டுக்காரர்களால் கூட கணவருக்கும், உங்களுக்கும் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுக்காக சப்போர்ட் செய்வதை தவிர்த்து கணவர் அமைதியாக இருக்கும் சூழல் ஏற்படும். இந்த ஒரு மாதத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகும். ரகசியங்களை கணவரிடம் கூட சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    பொருளாதாரம்

    கணவரின் உறவு சிறிது பிரச்சனை வரக்கூடிய வாய்ப்புள்ளாதல் பிரச்சனைகளை பெரிதாக்காமல் இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் பெரிய அளவு முன்னேற்றம் இல்லை என்றாலும், காசு, பணம் செலவாவது குறையும். இந்த மாதத்தில் இருந்து பணம் கையில் தங்கி, செலவுகள் குறையும். பொருளாதாரம் ரீதியாக சிறிது விடுதலை பெறக்ககூடிய சூழல் ஏற்படும்.

    வெளிநாடு வாய்ப்பு

    வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். சிங்கப்பூர், மலேசியா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சிட்டிசன்ஷிப் கிடைக்கும். ஏற்றுமதி தொழில் செய்யக் கூடியவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. கழிவுப் பாதை பிரச்சனை, சளி தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

    Advertisement

    வழிபாடு

    புது டயட்டுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆகஸ்ட் மாதத்தில் வரும் பிரச்சனைகள் தீர கோதை நாச்சியார் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாளை மனதார வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அல்லது அருகில் உள்ள கோயில்களில் ஆண்டாளை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். தினந்தோறும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடுவது நல்ல மாற்றங்களைத் தரும்.

    English Summary

    August matha palan: In this astrological article, let us look in detail at the benefits, remedies, and deities to be worshipped for the Rishabam (Taurus) sign during the month of August.