சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அந்த வகையில், வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். கடக ராசியினருக்கு சனி பகவானின் வக்கிர சனியானது மீண்டும் அஷ்டமத்து சனியை நினைவுபடுத்தும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் உடம்பால், மனதால், வருமானத்தால், உறவினர்களால், குடும்பத்தினரால், சக ஊழியர்களால் பட்ட கஷ்டம் எல்லாம் மீண்டும் வரும் 138 நாட்களுக்கு வரக்கூடிய அமைப்புள்ளாதல் மிகுந்த கவனம் தேவை. இந்த காலத்தில் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பது நல்லது. உங்களை நீங்களே தயார்படுத்திக் கொண்டே எந்த விஷயமானாலும் அதனை எளிதாக சமாளித்துச் செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். சனி பகவான் பார்வை காரணமாக 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் வீட்டுக்குள் உங்கள் மதிப்பு சிறிது குறையும். இதுவரைக்கும் செய்த செயல்களுக்கு பெயர், புகழ் சரியாக இல்லை என்பது தெரியும். கொடுக்கல், வாங்கல்கள் உங்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு கொடுக்க வேண்டியவர்களால் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாத தன்மை, அதனால் மன அழுத்தம் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. 5 ஆம் இடத்தையும் சனி பார்ப்பதால் பிள்ளைகளின் வளர்ச்சி, வாழ்க்கையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 5 ஆம் இடத்தையும் சனி பார்ப்பதால் பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.. பிள்ளைகளுக்குப் பிடிக்காத விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. அவர்களை கட்டாயப்படுத்துவது, திணிப்பது, திருத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். செய்கின்ற தொழிலில் சிறு சிறு இடையூறுகள் வந்து சேரும். உங்கள் மேலேயே சிறு சிறு புகார்கள் வரக்கூடிய வாய்ப்புள்ளது. அதனை கண்டு கொள்ளாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மையைத் தரும். சிம்ம ராசி, சிம்ம லக்னத்தினருக்கு கண்ட சனி காலத்தில் எப்படிப்பட்ட நிலை இருந்ததோ, மீண்டும் அதேபோன்ற ஒரு காலம் அடுத்த 138 நாட்களுக்கு உருவாகியுள்ளது. கண்டக சனி உடல்நலத்தை கெடுக்கும். மனநலத்தை கெடுக்கும். யார் நல்லவர், கெட்டவர், யாரை நம்புவது என்று தெரியாமல் குழப்பம் ஏற்படும். மாய சிந்தனைகள், மனகுழப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சனி பகவான் உங்கள் ராசியை பார்த்து கொண்டிருக்கிறார். யார் என்ன சொன்னாலும், திட்டினாலும் கவலைப்படாமல் கடந்து செல்ல வேண்டும். வசைபாடுபவர்களிடம் உண்மையை விளக்க சென்றால் அது இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே எதைப்பற்றியும், யாரின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பது அவசியம். சனி பகவான் நான்காம் இடத்தை பார்க்கிறார். உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். முதியோருக்கு ஜீரண பிரச்சனை, மூட்டு வலி, பசியின்மை போன்றவை அதிகரிக்கும். வருகிற டிசம்பர் மாதம் வரை உடல் ஆரோக்கியத்தில் அதிக எச்சரிக்கை வேண்டும். உணவு பழக்கத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சனி பகவான் ஒன்பதாம் இடத்தையும் பார்க்கிறார். பிரச்சனைகளுக்கு கோயில் சென்றால், அங்கு தரிசனம் கூட சரியாக அமையவில்லை என்று புலம்பும் நிலை ஏற்படும். சந்தர்ப்பம் கைமீறி செல்லும். சிம்ம ராசியினர் கடந்த இரண்டரை வருடங்களாகவே பல்வேறு பிரச்சனைகள், நெருக்கடிகளை கடந்து வந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த 138 நாட்களை கடப்பது பெரிய விஷயமல்ல. உங்களின் மனவலிமையால் இதையும் எளிதாக கடக்க முடியும். மனதுக்கு பொறுமை அவசியம். ஓய்வு எடுங்கள். நடப்பதை வேடிக்கை பாருங்கள்.எதற்கும் கருத்து சொல்ல வேண்டியதில்லை. வீட்டு அருகில் உள்ள முருகன் கோயில் சென்று வழிபடுவதும், தினசரி கந்தசஷ்டி கவசம் கேட்பதம் நேர்மறையான சிந்தனைகளை வளர்க்கும். கன்னி ராசியினருக்கு இதுவரைக்கும் சனி பகவான் 7 ஆம் இடத்தில் கண்டகச் சனியாக இருந்தார். தற்போது 6 ஆம் இடத்திற்கு வரப்போவதால் வரும் 138 நாட்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் எந்த காரியங்களை நினைத்தாலும், தொட்டாலும் லாபம், வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். உங்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடக்கூடிய காலகட்டமாக இருக்கும். 6 ஆம் இடத்தில் சனி இருப்பதை யோகத்தைக் கொடுக்கும். நீங்கள் நினைத்தது நடக்கக்கூடிய யோகம் உண்டாகும். தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். 3 ஆம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் முயற்சிகளை அதிகம் போட வேண்டியதிருக்கும். உழைப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தால் பெரிய வெற்றிகளை அடையும் யோகம் உண்டாகும். 8 ஆம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் கணவன், மனைவி, குடும்ப உறவுகளில் இணக்கம் ஏற்படும். தலைபாரம், தலைவலி, தலையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். 12 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் அதிக வேலை, அதிக பளு இருந்து கொண்டே இருக்கும். தொழில் ரீதியாக நிறைய ரிஸ்குகளை எடுக்க வேண்டியதிருக்கும். விற்பது, வாங்குவது, கொடுப்பது, கடனை கட்டுவது என வேகமெடுக்கும் காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். ஒருமுறைக்கு இருமுறை முயற்சி போட வேண்டியதிருந்தாலும் இறுதியில் அதில் வெற்று பெற்று சாதிக்கக்கூடிய அற்புதமான அமைப்பு உண்டாகும். 138 நாட்களில் உழைப்பிற்கான பலனைப் பெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.சனி வக்ர பெயர்ச்சி
கடகம்
சிம்மம்
கன்னி