துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு சனி தரப்போகும் சர்ப்ரைஸ்.. சனி வக்கிர பெயர்ச்சி முழு பலன்கள்

  • சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். டிசம்பர் 11 ஆம் தேதி கார்த்திகை மாதம் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். கிட்டத்தட்ட 138 நாட்கள் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்கிறார். வக்ரகதி நடப்பதால் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும். இந்த சனி வக்ர பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    சனி பகவான் மந்த காரகன், நீதிமான் மற்றும் கர்ம வினைகளைத் தீர்ப்பவர் என்று போற்றப்படுகிறார். மனிதன் தன் வாழ்வில் செய்யக்கூடிய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப எந்தவித பாரபட்சமுமின்றி பலன்களை வழங்குபவராக சனி பகவான் விளங்குகிறார். எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அவரவர் செய்த கர்மங்களுக்கு ஏற்ப பலனை அளிப்பதால் சனிப்பெயர்ச்சி, சனி வக்ர நிலைகள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

    Advertisement

    சனி வக்ர பெயர்ச்சி

    அந்த வகையில், வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் வக்ர கதி அடைந்து பயணிக்கவுள்ளார். இந்த கிரக மாற்றம் ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனி வக்ர நிலையில் இருக்கும் காலத்தில் அதன் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே, அதிகரிக்கும் 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உறவுகள், தனிப்பட்ட முன்னேற்றத்தில் பல்வேறு விதமான பலன்கள் காணப்படும்.

    அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    துலாம்

    துலாம் ராசிக்காரர்களுக்கு 6 ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் இப்போது வக்கிரம் பெற்று கும்பத்திற்கு வருகிறார். 5 ஆம் இடத்தில் வந்து சனி பகவான் அமருவதால் இருக்கின்ற இடம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்காக, பிள்ளைகளின் வளர்ச்சிக்காக சில விஷயங்கள் செய்வது, பயணங்கள் மேற்கொள்வது, கோயில்களுக்குச் செல்வது நல்லது, குலதெய்வ கோயில்களுக்குச் செல்வது போன்ற அமைப்பு உள்ளது.

    பூர்வீகத்தில் நியாபகார்த்தமாக ஏதாவது செய்வீர்கள், வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வாகனங்கள் வாங்குவது, தான தர்மங்கள் செய்வது போன்ற யோகம் உண்டாகும். சனி பகவானின் பார்வை முதல் பார்வையாக மேஷத்தை பார்ப்பதால் கணவன், மனைவி, குடும்ப உறவுகளில் உடல்நிலையில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் உடனடியாக மருத்துவம் பார்ப்பது நல்லது. உடல்நலக் கோளாறுகளை தள்ளிப் போடுவதை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    உங்களை விட வயது குறைந்தவர்கள் மூலமாக உங்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் குறையும். சனீஸ்வர பகவானின் பார்வை நேரடியாக 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் உழைப்புக்குத் தகுந்த லாபங்கள் கிடைக்கும். பெரிய கவலைகள், குற்றங்கள், குறைகள் தீரும். உழைப்பால் முன்னேறும் காலகட்டம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சு வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    யாரிடம் பேசினாலும் கவனமாகப் பேசுவது, கவனமாக வேலைகளை செய்வது நன்மை பயக்கும். சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. சுத்தமாக இருப்பது ஏற்றத்தை தரும். நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த 138 நாட்களில் பெரிய சிக்கல்கள் எதுவும் ஏற்படாது. ஆனால், கவனக் குறைவால் கஷ்டப்படும் சூழல் இல்லாததால் கவனம் தேவை.

    Advertisement

    விருச்சிகம்

    விருச்சிக ராசியினருக்கு சனி பகவான் 5 ஆம் இடத்தில் இதுவரை இருந்தார். இப்போது வக்கிர கதியாவதால் 138 நாட்களுக்கு 4 ஆம் இடத்துக்கான பலன்களை கொடுக்கப் போகிறார். படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீடு, மனை, கார் வாங்க காத்திருப்பவர்களுக்கு செட்டிலாகும் யோகம் உண்டாகும். சனி 6 ஆம் இடத்தைப் பார்ப்பதால் இதுவரைக்கும் இருந்து வந்த எதிரிகள் ஒழிவார்கள்.

    கடன்களை கட்டக்கூடிய யோகம் உண்டாகும். தொலைதூரப் பயணங்கள் மூலம் வெற்றியைப் பெறுவீர்கள். இடமாற்றங்கள் உண்டாகும். வேறு ஊர்களுக்கு, வேறு இடங்களுக்கு, வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு சுய தொழில், சொந்த தொழில் தொடங்கக்கூடிய யோகம் உண்டாகும். சொந்த தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

    Advertisement

    புதிய கிளைகளை தொடங்கும் யோகம் உண்டாகும். கூடுதலாக 10 பேருக்கு வேலை போட்டு கொடுக்கக்கூடிய எண்ணங்கள் உருவாகும். நில, புல ஆதாயங்கள் கிடைக்கும். உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள் மூலமாக ஒத்தாசைகள் உண்டாகும். சனி பகவானுடைய அடுத்த பார்வை 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனம் இயக்குபவர்கள் அது சார்ந்த தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

    தனுசு

    தனுசு ராசி, தனுசு லக்னத்தினருக்கு மிகவும் அற்புதமான அமைப்பு உருவாகியுள்ளது. சனி பகவான் நான்காம் இடத்தில் இருந்தார். இப்போது அவர் வக்ர நிலையில் மூன்றாம் இடத்தில் இருந்து அடுத்த 138 நாட்களுக்கான பலன்களை வழங்குவார். சனி மூன்றாவது இடத்தில் இருப்பது நல்ல பலன்களை கொடுக்கும். சனி, செவ்வாய் மூன்று, ஆறு, ஒன்பதாம் இடங்களுக்கு வந்தால் முடிசூடா சக்ரவர்த்தி என்றழைப்பார்கள். நீங்களே எதிர்பாராதளவுக்கு வெற்றிகள் குவியும்.

    அடுத்தடுத்து வெற்றிகள் வந்து குவியும். எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வியே தெரியாதளவுக்கு ஜெயம் உண்டாகும். போட்டி பொறாமையின்றி எளிதாக வெற்றி பெறுவீர்கள். மனதில் தெளிவான சிந்தனைகள் உண்டாகும். உழைப்பு, சம்பாதிப்பு எல்வாற்றையும் தெளிவாக திட்டமிட்டு சாதிப்பீர்கள். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பீர்கள். உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்களால் பலனடைவீர்கள். உங்களால் அவர்களுக்கும் ஆதாயமுண்டு.

    உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். இட மாற்றம் நிச்சயம் உண்டு. வெளி மாநில, வெளி நாடு வாய்ப்புகள் நிச்சயம் வரும். பண வரவு அதிகரிக்கும். வீண் விரயங்கள் குறையும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு உண்டு. மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். கடன் சுமை வெகுவாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப காரிய தடைகள் விலகும். கவலைப்பட எதுவுமில்லை.

    பெற்றோர் உடல்நலத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டும். தாய் வழி உறவுகளில் கூடுதல் கவனம் தேவை. குழந்தைள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதை தவிர்த்து விட்டு கொடுத்து செல்வது நல்லது. குல தெய்வ வழிபாடு அற்புதமான பலன்களை கொடுக்கும். இந்த 138 நாட்களில் ஒருமுறையாவது குடும்பத்தினருடன் குல தெய்வ கோயில் சென்று வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

    English Summary

    Let us look at the benefits that individuals belonging to the Thulam, viruchigam, dhanusu signs will receive due to Saturn's retrograde movement.