சனி வக்ர பெயர்ச்சி 2026: அதிர்ஷ்ட ராசிகள் யார்?.. துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்கான முழு பலன்

  • சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ள இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து பார்க்கலாம்.

    Advertisement

    ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இந்த நிலை மாற்றமானது அனைத்து ராசியினருக்கம் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சனி பகவான் வக்ரமாகியுள்ளார். சனி வக்ர பெயர்ச்சி என்பது சனி பகவான் தனது வழக்கமான இயக்கத்திற்கு மாறாகப் பின்னோக்கிச் செல்லும் காலகட்டமாகும்.

    Advertisement

    ஜூலை 27 ஆம் தேதி முதல் சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். 130 நாட்கள் நீடிக்கும் இந்த சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

    துலாம் ராசி பலன் (Thulam)

    சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு நிறைய நன்மைகள் நடக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

    Advertisement

    பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த மன வருத்தங்கள் தீரும். தொழில் ரீதியாக அற்புதங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். அடுத்தடுத்து நல்ல முன்னேற்றங்கள் காணப்படும்.

    விருச்சிகம் ராசி பலன் (Viruchigam)

    விருச்சிகம் ராசியினருக்கு பிள்ளைகளிடம் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. வேற்று மொழி மனிதர்களால் அதிகளவில் லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், பழக்கவழக்கங்கள், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேற்று மொழி மனிதர்களால் அதிகளவில் ஆதாயம் உண்டாகும். கடல் கடந்து தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.

    Advertisement

    விருது, அங்கீகாரம் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். உடனிருப்பவர்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உறவுகளால் பாதிப்புகள் ஏற்படும். பெற்றோர், பெரியோரால் மன வருத்தங்கள் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். உறவுகள், ரத்த பந்தங்கள், தேக ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. இழுபறியாக இருந்த விஷயங்கள் பெரிதாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    தனுசு ராசி பலன் (Dhanusu)

    சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். துணையைப் பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வெளியிடம், தொழில், உத்தியோகம், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். லாபங்கள் அதிகரிக்கும். அனுகூலம் காணப்படும். பொறுமையாக இருந்து எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொள்வது நல்லது.

    Advertisement

    நிறைய நீர் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கழுத்து, முதுகு வலி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. மேல்மலையனூர், அங்காளம்மனை தினமும் நினைத்து வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு தொடர்பான பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.

    மகரம் ராசி பலன் (Magaram)

    மகர ராசியினருக்கு எல்லா விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். துணை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இருக்கக் கூடாது. நிறைய பண வரவு ஏற்படும். வண்டி வாங்குவது, தொழில் செய்வது போன்ற யோகங்கள் உண்டாகும்.

    Advertisement

    வீடு கட்டுவது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்ற அமைப்பு ஏற்படும். வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்து தனித் தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். விவசாயம் தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். ஆச்சரியமான முன்னேற்றங்கள் உண்டாகும். ஆடு வளர்ப்பது, கோழி வளர்ப்பது போனற யோகம் உண்டாகும். பெயர், புகழ் வரக்கூடிய நல்ல காலகட்டம்.

    கும்ப ராசி பலன் (Kumbam)

    சனி வக்ர பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். தொழில், உத்தியோகம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். வார்த்தைகளில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதத்தில் இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அடுத்த குரு பெயர்ச்சி வரை ஆரோக்கியம், எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

    சனி வக்ர பெயர்ச்சியில் நிறைய நன்மைகள் காணப்பட்டாலும் தினந்தோறும் ஆயில் புல்லிங் செய்வது நன்மையைத் தரும். வார்த்தைகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் ஏற்றமும், அனுகூலமும் காணப்படும். 70 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். அனுகூலமும், சந்தோஷமும் காணப்படும்.

    மீனம் ராசி பலன் (Meenam)

    மீன ராசியினருக்கு ஜென்மத்தில் சனி பகவான் இருப்பதால் கால், பாதம், மூட்டு வலி, வண்டி வாகனம் தொடர்பான விஷயங்கள், நெருப்பு, வழுக்கலான இடங்கள், படிக்கட்டுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மகான்கள் வழிபாடு, நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு ஏற்றத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

    வாகனங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நன்மை பயக்கும். ஜென்ம சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சியை செய்வது ஏற்றத்தைத் தரும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரப் பெயர்ச்சி நடைபெறுகிறது என்பதால் வாகனங்களில் செல்லும்போது, ஆவணங்கள் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.

    English Summary

    Let us look at the auspicious results, areas requiring caution, and the deities to be worshipped by the 12 zodiac signs from Thulam to meenam during this period of Saturn's retrograde transit in the sign of Pisces.